அமேசான் கிண்டிலில் அண்மையில் மின் நூலாக வெளிவந்துள்ள, யதார்த்தவாதம், மாய யதார்த்தம், அறிவியற் புனைவு உள்ளிட்ட வகைமைகளையும் நகைச்சுவை, காதல், பிரிவு, பெருந்துயரம் போன்ற உணர்வு வெளிப்பாடுகளையும் கொண்ட, மாறுபட்ட வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய, சிறியதும் பெரியதுமான நாற்பது குறுங்கதைகளின் தொகுதி.
தவிப்பு: வித்தியாசமான கண்ணோட்டத்தில் அருமையான முயற்சி. கதை, கதையைப் பற்றிக் கதாசிரியருடன் உரையாடுகின்ற இடங்களில் வாழ்வின் பிற சந்தர்ப்பங்களுக்கும் ஏற்புடைய, பெரிதாக வெளித் தெரியாத, பேசப்படாத, அனுபவத்தில் மட்டுமே அறியக் கூடிய உணர்வுகள் வார்த்தைகளில் வடிக்கப் பட்டிருக்கிறது.
ப்ரஷர் குக்கர்: கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் அழுத்தம் நிறைந்த பணியிடச் சூழலின் நடப்புகளின் கண்ணாடி.
தயக்கம்: தலைப்புக்கேற்றாற் போல, உதடுகளும், மூளையும் தொடுக்கப் படாத உரையாடல்களுக்கு ஏதுவாவது எதுவென்பதைச் சொல்கிறது.
கயா: பூமி எனும் பெண் தெய்வம் பேசினால் என்ன சொல்லும்?
திருட்டு: புலமைச் சொத்துத் திருட்டு வித்தியாசமான பார்வையில்.
அங்கு யாரும் புலப்படவில்லை: கடைசிவரைதொடரும் திகில்.
மிகைல்: யதார்த்தம் பாதி அறிவியல் மீதி.
மிடில் கிளாஸ்: இரத்தினச் சுருக்கமாய் – நச்சென்று.
அருவம்: அருவமும் உருவமானால்!
வாட்ஸ் அப்: செர்ரி ப்லோசோம் (cherry blossom) போன்ற காதலே ஆயினும் வடுக்கள் தொலைபேசி எண்ணை அழித்து விடுவதால் நீங்கி விடாத அங்கலாய்ப்பு.
மஜ்னூன்: லைலா-மஜ்னு வை மையமாகக் கொண்ட அறிவியல் புனைவு.
இன்னும் பல குறுங்கதைகளை ஏந்தி வெளி வந்துள்ள இந்த மின்நூல் இவரது முதல் தொகுப்பு. சகோதரர் நரேஷின் எழுத்துப்பயணம் நெடிது நீண்டு சிகரங்கள் தொட அகமார வாழ்த்துகிறேன்.
நூல் : மஜ்னூன் (Kindle Edition)
பிரிவு: குறுங்கதைத் தொகுப்பு
ஆசிரியர் : ம.நரேஷ்
வெளியான ஆண்டு : 2021
விலை : ₹ 49
கிண்டிலில் நூலைப் பெற
நூலை வாசித்து சிறப்பான விமர்சனத்தை முன்வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
நல்லது சகோதரா! தொடர்ந்து எழுதுங்கள்.