குறுங்கதைகள்நூல் அலமாரிமின்னூல்

நரேஷின் ‘மஜ்னூன்’ குறுங்கதைகளின் தொகுப்பு குறித்த பார்வை


மேசான் கிண்டிலில் அண்மையில் மின் நூலாக வெளிவந்துள்ள, யதார்த்தவாதம், மாய யதார்த்தம், அறிவியற் புனைவு உள்ளிட்ட வகைமைகளையும் நகைச்சுவை, காதல், பிரிவு, பெருந்துயரம் போன்ற உணர்வு வெளிப்பாடுகளையும் கொண்ட, மாறுபட்ட வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய, சிறியதும் பெரியதுமான நாற்பது குறுங்கதைகளின் தொகுதி.

தவிப்பு: வித்தியாசமான கண்ணோட்டத்தில் அருமையான முயற்சி. கதை, கதையைப் பற்றிக் கதாசிரியருடன் உரையாடுகின்ற இடங்களில் வாழ்வின் பிற சந்தர்ப்பங்களுக்கும் ஏற்புடைய, பெரிதாக வெளித் தெரியாத, பேசப்படாத, அனுபவத்தில் மட்டுமே அறியக் கூடிய உணர்வுகள் வார்த்தைகளில் வடிக்கப் பட்டிருக்கிறது.

ப்ரஷர் குக்கர்: கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் அழுத்தம் நிறைந்த பணியிடச் சூழலின் நடப்புகளின் கண்ணாடி.

தயக்கம்: தலைப்புக்கேற்றாற் போல, உதடுகளும், மூளையும் தொடுக்கப் படாத உரையாடல்களுக்கு ஏதுவாவது எதுவென்பதைச் சொல்கிறது.

கயா: பூமி எனும் பெண் தெய்வம் பேசினால் என்ன சொல்லும்?

திருட்டு: புலமைச் சொத்துத் திருட்டு வித்தியாசமான பார்வையில்.

அங்கு யாரும் புலப்படவில்லை: கடைசிவரைதொடரும் திகில்.

மிகைல்: யதார்த்தம் பாதி அறிவியல் மீதி.

மிடில் கிளாஸ்: இரத்தினச் சுருக்கமாய் – நச்சென்று.

அருவம்: அருவமும் உருவமானால்!

வாட்ஸ் அப்: செர்ரி ப்லோசோம் (cherry blossom) போன்ற காதலே ஆயினும் வடுக்கள் தொலைபேசி எண்ணை அழித்து விடுவதால் நீங்கி விடாத அங்கலாய்ப்பு.

மஜ்னூன்: லைலா-மஜ்னு வை மையமாகக் கொண்ட அறிவியல் புனைவு.

இன்னும் பல குறுங்கதைகளை ஏந்தி வெளி வந்துள்ள இந்த மின்நூல் இவரது முதல் தொகுப்பு. சகோதரர் நரேஷின் எழுத்துப்பயணம் நெடிது நீண்டு சிகரங்கள் தொட அகமார வாழ்த்துகிறேன்.

 

நூல் தகவல்:

நூல் : மஜ்னூன் (Kindle Edition)

பிரிவு:  குறுங்கதைத் தொகுப்பு
ஆசிரியர்   : ம.நரேஷ்
வெளியான ஆண்டு : 2021
விலை     : ₹ 49

கிண்டிலில் நூலைப் பெற

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

2 thoughts on “நரேஷின் ‘மஜ்னூன்’ குறுங்கதைகளின் தொகுப்பு குறித்த பார்வை

  • நூலை வாசித்து சிறப்பான விமர்சனத்தை முன்வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *