- அகழ் இணையதளத்தின் ஜூலை 2021- ஆம் இதழில் வெளியான ச.துரையின் “ வாசோ” சிறுகதை குறித்து அர்ஷா மனோகரனின் விமர்சனப் பார்வை.
மிகுந்த நெருடலை ஏற்படுத்தக்கூடிய, மனித மனங்களின் மனநிலையை ஆழமாக அறியப்பட வேண்டும். என்ற நிலையை உணர்த்தக் கூடிய அற்புதமான ஒரு சிறுகதை.
ஆவலைத் தூண்டும் கதை நகர்வு. மிகவும் எளிய நடையில். எந்தவொரு உறவிலும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆரம்பமாகிறது, மாலதிக்குக் கதாநாயகன் மீது நம்பிக்கை வராமல் போனதில் தவறேதும் இல்லை. அடிப்படையில் அவன் அவளைப்பற்றித் தேடுகிறான், ஆனால் அந்தத் தேடுதலில் ஏதோ ஒரு கள்ளத்தனம் இருக்கிறது. அவனிடம் உண்மை இல்லை, வெளிப்படைத்தன்மை இல்லை, அது தயக்கத்தின் காரணமாக இருந்தாலும், கள்ளமில்லா உள்ளத்தில் தயக்கம் வரவும் வாய்ப்பு இல்லை. என்ற அடிப்படையில் அவள் அவனைத் தன்னை அழிக்க வரும் ஒரு விலங்காகப் பார்ப்பது மிக அருமை.
மாலதியின் தாய் உண்மையில் நாய் கடித்து இறந்திருக்கலாம், அல்லது தீ விபத்து ஏற்பட்டு இறந்திருக்கலாம், அல்லது ஓநாய் போன்ற யாரோ ஒரு மனிதனால் தாக்கப்பட்டு இருக்கலாம், இப்படி எதுவாக இருந்தாலும் அவள் தாய் இல்லாமல் போனதற்குக் காரணம், வெளிப்படைத் தன்மை இல்லாத ஒன்று. என்பதைச் சிறுமி நம்புகிறாள்.
கதையில் சிறுமியின் வயது, கதாநாயகனின் வயதும் சொல்லப்படாமல் இருப்பது சிறப்பு. வாசகன் அவர்களுக்கு ஏற்ப வயதைக் கற்பனை செய்து கொள்ள முடிகிறது.
நமக்குள் இருக்கும் பல்வேறு உணர்வுகளில் பல்வேறு முகங்களில் சில நேரங்களில் சில மிருகங்களையும் பார்க்க முடியும். நன்றி உணர்வில் நாய்களையும், பரவசத்தில் பட்டாம்பூச்சி களையும், தந்திரத்தில் நரிகளையும், எனப் பல நேரங்களில் பல்வேறு விலங்குகளின் முகங்களை நாம் பொருத்திக் கொள்ளலாம்.
அதைக் கதையின் இறுதிப்பகுதி விளக்குவது மிகச் சிறப்பு.
சிந்திக்கத் தூண்டும் சிறந்த கதையைத் தந்த எழுத்தாளர் ச.துரைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
– அர்ஷா மனோகரன்.