நிறையக் குடும்பங்களில் தந்தையைப் பற்றிய பிம்பத்தை பிள்ளைகளின் மனதில் எப்படி பதிகிறது என்பதில் மிகப் பெரிய பங்கு தாயைப் பொறுத்தே அமைகிறது.

Bynge செயலியில் எழுத்தாளர் பெருமாளமுருகன் எழுதிய “நெடுநேரம்” தொடரில்  கதாபாத்திரங்களின் பெயர்களும் ஊரின் பெயர்களும் வித்யாசமாக இருப்பது. உண்மையிலேயே இப்படி ஒரு ” குலம் “இருக்கிறதா கதைக்காக உருவாக்கப்பட்டதா என தெரியவில்லை.

ஒரு ஆசியரின் மனைவியாக வாழ்ந்தவள் இரண்டு பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து மூன்றாவது பிள்ளைக்கும் திருமணம் முடிக்கும் வயதில் திடீரென காணாமல் போவது , அந்தக் கணவனின் மீதான குற்றமாகவோ அல்லது அவளின் மீதான தவறான எண்ணங்களையோ பிரதிபலிக்கிறது.

வெளியூரில் வேலைப் பார்க்கும் முருகாசு கொரோனா காலத்தில் தன் வீட்டுக்கு வரமுடிவு செய்கிறான் .அம்மாவுக்கு சஸ்பென்சாக இருக்கட்டும் என்று வீட்டுக்கு வந்ததும் தந்தை தான் வரவேற்கிறார். இரவு நேரமாகி விட்டதால் அம்மாவை எழுப்ப வேண்டாம் என நினைத்து உறங்கி விடுகிறான்.

விடிந்ததும் டீ கொதிக்கும் வாசனையில் அம்மாவை அழைத்துக் கொண்டே வருபவன் தந்தையை பார்த்தும் .  “அம்மா எங்கப்பா?” என்கிறான்.

“அம்மா காணாம போயிட்டா?  “ இதை ஆறுமாதமாக யாரிடமும் சொல்லாமல் மறைத்ததாக அவர் கூறுவது இவனுக்கு அதிர்ச்சியைத் தருகிறது .

அம்மாவின் வாசனை மட்டுமே உணர்ந்தவன் முதன் முதலில் தந்தையின் அணைப்பில் படுத்துக் கொண்டு அவர் சொல்லுவதைக் கேட்பதே புது அனுபவம்.

பணி ஓய்வுப் பெற்று உடன் பணிபுரியும் ஆசிரியர்களுடன் வீட்டுக்கு வருபவருக்கு பூட்டிய கதவே வரவேற்கிறது. உள்ளே சென்றவருக்கு மனைவியின் கடிதம்!

“உங்களுடன் நெடு நேரம் வாழ்ந்து விட்டேன் இருக்கும் காலத்தை எனக்காக வாழப்போகிறேன் என்னைத் தேட வேண்டாம்”

இது நிறையப் பெண்களின் மன நிலையை பிரதிபலிப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் எல்லா பெண்களுக்கும் இந்த முடிவை எடுக்கும் தைரியமோ, சாத்தியமோ இருக்க வாய்ப்பில்லை.

குடும்பத்தினரின் கட்டாயத்திற்காக வாழ்ந்து கணவன் ஓய்வு பெறும் வரைக்கும் மனைவியாக தன் கடமையை செய்பவள் சரியாக ஓய்வு பெறும் அன்று விலகிச் செல்கிறாள்.

கணவன் மனைவி நேரடியாக பேசாமலே வாழ்ந்தது ஆச்சர்யமெனில், மகனின் கேள்விக்கு தந்தையின் பதில் ” காமத்திற்கு இரு உடல்கள் போதாதா?”

யதார்த்தம் தான் . காமம் என்பது பிள்ளை பெறுவதற்கான ஒரு செயலியா? இரு மனங்களின் இசைவு தேவையில்லையா?

தந்தையின் மறுபக்கத்தை உணரும் தருணமாகவே அமைகிறது முருகாசுக்கு. தந்தையின் இளமைக்காலக் கதையும் மாமனின் நன்றிக்கடன் தீர்க்கவே அவர்களின் பேச்சை மீறாமல் திருமணம் செய்தாலும் அவளை விரும்பியதாகவே சொல்கிறார்.

தாயைப் பற்றிய செய்தியை தந்தையிடம் கேள்வி படுபவன் முழுதாக திருப்தியில்லாமல்  தன் அம்மாவை தேடுவதாகச் செல்கிறான்.துணைக்கு நண்பனை அழைத்துச் செல்கிறான்.
நண்பன் மேகாசு துணையுடன் பயணம் செய்பவன் தாயைப் பற்றி சொல்லாமலே உடன் பயணிக்கிறான். இடையில் இவனின் காதலும் நண்பனின் காதலும் சிறு இடைவெளியில் பயணிக்கிறது.

தன் அண்ணனைப்பற்றிய நினைப்பில் தன் தந்தையிடம் என்ன‌ கூறியிருப்பான் என்று கற்பனை செய்துக் கொள்வது முகம் சுளிக்க வைத்தாலும் அது கதையோடு பொருந்துவதால் பெரிதாக தெரியவில்லை.

வழியில் வண்டியில் இருந்து விழுந்து விடுவதால் ஒரு கிராமத்தில் தங்குகிறார்கள். மெல்ல கிராமத்தினரிடம் பேச்சுக்கொடுக்க அங்கு ஒரு பெண்மணி குருவிகளுக்கு அரிசி வாங்கி போடுவதாக சொல்லவும், இவன் அம்மாவாக இருப்பாளோ என்ற நப்பாசையில் விடிகாலையில் காத்திருப்பதை அவன் மனத் தத்தளிப்பை அழகாக சித்தரிக்கிறார்.

அவர்களின் பூர்வீக கிராமத்திற்கு சென்றதும் பாட்டியின் உபசரிப்பில் மகிழ்ந்தாலும், தாயைப் பற்றிக் கேட்கிறான். அவள் மழுப்பவும். தாயை காணவில்லை என்ற உண்மையை சொல்கிறான்.

கோபத்தில் சிடுசிடுக்கிறாள்.இவள் செய்த காரியத்தால தான் இந்த ஊரு பொண்ணுங்க படிக்க முடியாம போயிடுச்சி .

பாட்டியிடம் வரும் மஞ்சியின் மூலம் தாயின் கதையை முழுவதுமாக தெரிந்துக் கொள்கிறான்.

இவர்களை விட தாழ்ந்த குலத்தை சேர்ந்த மதுரனை விரும்பியதில் வந்த வினையே பெரிய கலவரத்தில் முடிந்து, அந்தப் பையன் பனங்கறுக்கால் வயிற்றைக் கிழித்துக் கொள்கிறான். இந்த சம்பவம் உடல் பயத்தில் சிலிர்ப்பூட்டக் கூடிய இடம்.

குழந்தைகள் பிறந்து திருமணம் முடித்து ஒரு தவ வாழ்க்கையைப் போல் வாழ்ந்தவள் யாரைத் தேடி ஏன் காணாமல் போகிறாள் என்பதை வாசகர்களின் யூகத்திற்கு விடப்படுகிறது.


ஞ்சி கூறிய அனைத்தும் தந்தைக்குத் தெரியாமலா இருந்திருக்கும் . எப்பொழுதும் தந்தைகளைப் பற்றி தாய்தான் குற்றச்சாட்டுகளை பிள்ளைகளிடம் வைக்கிறாள். முருகாசுவின் மனதில் தந்தைக்கான தராசு மேலேச் செல்கிறது.

ஆனால் தந்தைகளோ யாரிடமும் தன் மனைவியைப் பற்றி தவறாக பேசுவதில்லை. இது உண்மையுங் கூட.

இதில் மனைவித் தேட வேண்டாம் என்பதை கோரிக்கையாகவே ஏற்று விலகி நிற்பது மனைவியின் சந்தோஷத்திற்காகவா? இல்லை விருப்பமில்லாதவளை எதற்குத் தேடனும் என்கிற மனநிலையா? ஒரு தந்தையாக முருகாசுவிற்கு சாப்பிடும் பொழுது ருசியைப் பற்றி கேட்பது அம்மாவைப் போல் தன்னால் தன்மகனின் ருசியை சமன்படுத்த முடியாதோ என்கிற ஆதங்கம் முருகாசுவையே தடுமாற வைக்கிறது.

தாய் காணாமல் போவது, தந்தைக்கும் மகனுக்குமான  ஒரு பாலமாகவே அமைகிறது

இவர்களாகவே ஒரு முடிவிற்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது.  மங்கா மதுரனுடன் இருப்பாள் என்பதை மஞ்சி யூகித்து இனியாவது நல்லா இருக்கட்டும் என்று கூறுவது, மங்காவின் இருப்பை நிச்சயமாக உணர்த்தாமல் யூகத்தின் அடிப்படையில் முடித்திருப்பது நிறைவில்லாத உணர்வைத் தருகிறது.

மங்காவின் மூலம் அவள் தரப்பை ஏதாவது சொல்லியிருக்கலாம். கதையின் பெயர்கள்தான் ஒரு செயற்கைத் தன்மை தருவதுப் போலவே தோன்றுகிறது. அதிலும் எல்லா பெயர்களுமே ஒரே மாதிரி வருவதால் அது மாதிரி தோன்றுகிறதோ?.

ஆயினும் தொய்வில்லாத கதையோட்டம் படிக்கும் ஆர்வத்தை தருகிறது.

காதல் என்பது இருவர் சம்பந்தப்பட்டது என்றாலும் பெண்ணோ, ஆணோ இருவரில் யார் கீழ்சாதியை சேர்ந்தவர்களோ அவர்களை தண்டிப்பதையே குறியாக இருப்பதுவே சமூக அவலம்.


Bynge தமிழ் செயலியில் நெடுநேரம் தொடர் வாசிக்க >> https://link.bynge.in/hxF6 

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *