மீபத்தில் திருப்பூரைச் சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மேகா அவர்களின் சிறார் கதைகளைப் படித்து ஒரு முன்னுரை எழுதினேன். இப்போது  இன்னொரு மாணவர் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து எழுதிய சிறார் நூல் பற்றி எழுதுவதும் இன்னொரு விதமான மகிழ்ச்சியாக இருக்கிறது.

கொரானா  காலகட்டத்திற்குப் பிறகு குழந்தைகளின் எழுத்துத் திறனும் வாசிப்ப திறனும் சிதறடிக்கப்பட்டு இருக்கிறது குழந்தைகளின் எழுத்து பயிற்சியும் இல்லாமல் அல்லது குறைந்து போய்விட்டது. இந்த சூழலில் குழந்தைகள் தங்கள் அனுபவங்களைக் கதைகளாக எழுதுவது அவர்களுக்கு மொழி சார்ந்த பயிற்சியாகவும் இருக்கும். தங்களுடைய அனுபவத்தை விரித்துக்கொண்டு போவதற்கான முயற்சியாக இருக்கும்.

முன்பெல்லாம் குழந்தைகள் கதைகள் என்ற பெயரில் பெரிய பெரியவர்கள் தான் அதிகம் எழுதுவார்கள். ஆனால் இன்று குழந்தைகளே நிறைய எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் அவை எல்லாம் இன்னும் பெரிய விரிந்த பரப்பிற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

பாடப் புத்தகங்களைத் தாண்டி மொழிப் பயிற்சிக்காக எழுதுவதும் கதை அனுபவத்தை விரித்துக்கொண்டு போவதும் வாசிப்பும் மிகவும் அவசியம் எனப்படுகிறது. இந்த சூழலில் சச்சின் தன் அம்மாவுடன் இணைந்து இந்த தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார் .அது ஆரோக்கியமான கதைகளாக இருக்கிறது என்பது மகிழ்ச்சி .

விலங்குகள் பறவைகளை வைத்துக் கொண்டுதான் நீதிகளை அறிவுரைகளை சொல்ல வேண்டும் என்று இல்லை. அப்படிச் சொல்வதில் இருக்கின்ற கற்பனை வளமும் முக்கியமானது. ஆனால் இன்றைய சமூகத்தில் குழந்தைகள், பெண்கள், பெற்றோர்,  கல்வி பற்றியும்  முக்கியமாகச் சுற்றுச்சூழல் பற்றியும் நமக்கு உள்ள பார்வை வெவ்வேறு வகைகளில் குழந்தைகளிடம் வெளிப்படுகிறது அப்படித்தான் அவர்கள் அதை எல்லாம் கவனித்து இன்றைக்கு எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான மொழி என்பது குழந்தைகள் எழுதும்போதுதான் வசப்படும். அதைத் திரும்பத் திரும்பப் படிக்கிறபோது பெரியோர்களுக்கும் வசப்படும். அப்படித்தான் எளிமையான மொழியில் சச்சினும்  கதைச் சொல்லி சரிதாவும் இந்த நூலை எழுதி இருக்கிறார்கள். நவீனத் தமிழ் இலக்கிய பங்களிப்பில் குடும்பமே ஈடுபடுவது அல்லது குழந்தைகளின் பங்கேற்புடன் பெரியவர்கள் ஈடுபடுவது என்பது மிக முக்கியமானது. அப்படித்தான் நான் சச்சின் உடைய பங்களிப்பையும் சரிதா ஜோவுடன் கவனிக்கிறேன்.

இவற்றில் சிறுவர்களுக்கான கற்பனை வளம் சிறப்பாக இருக்கிறது மேகத்தை பார்த்து வெள்ளைக்கிளி என்றும், வெள்ளை யானை என்றும் அவர்களால் மகிழ்ச்சி அடைய முடிகிறது. கனவுகளைப் பற்றிப் பல தகவல்கள் பெரியோர்களால் சொல்லப்படும். ஜாதக குறிப்புகளும் தினசரி கேலண்டர் குறிப்புகளும் நிறைய கிடைக்கும். ஆனால் அந்த கனவுகள் என்பது என்ன என்பதைப் பற்றிய ஒரு விஞ்ஞானப் பார்வையை ஒரு கதை சொல்கிறது. இயற்கை சூழலும் வாழ்வும் என்றைக்கும் மனிதனை  இயல்பாக இருக்க வைக்கும். ஆனால் இன்றைக்குச் சூழல் மாறிவிட்டது.

இயற்கையிலிருந்து நாம் வெகுவாக தள்ளி இருக்கிறோம். அதனால் நிறையச் சிரமப்படுகிறோம். அதில் இந்த கொரானா தொற்று முக்கியமானதாகும். நமக்கு எல்லாமே கிடைத்து விடுகிறது .ஆனால் இயற்கையோடு இணைந்த அனுபவங்கள்   கிடைப்பதில்லை அப்படித்தான் மலர்களிலிருந்து தேனை எடுத்துக் கொள்ள வண்ணத்துப்பூச்சி விரும்புகிறது. நேரடியாக அதற்குக் கிடைக்கும் தேன் என்பது அதற்குத் தேவையில்லாமல் இருக்கிறது இந்த அனுபவம்  மனிதனுக்கும் மிகவும் பொருத்தப்பட உள்ளதாக இருக்கிறது. இந்த கதைகளில் உரைநடைத் தன்மை என்பதை மீறி பேச்சுவழக்கில் கதைகளை எழுதியிருப்பதும் இன்னும் வாசகர்களை ஈர்ப்பு  ஆக்குகிறது எல்லா உயிர்களுக்கும் இருக்கும் இயல்புகள் மனிதர்களைப் போல முக்கியமானவை என்று இக்கதைகள் சொல்லுகின்றன .காதலர் தினம் பற்றிய பல்வேறு விளக்கங்கள் இருந்தாலும் அன்பு நேசம் இவற்றை மையமாகக் கொண்ட காதலர் தினம் பற்றிய கதைகளும் கூட தனித்தன்மை பெற்று இருக்கின்றன. மழை என்ற அனுபவத்தை அல்லது நல்ல காற்றை அனுபவிப்பது அல்லது இயற்கை சூழலை வெளிக்காட்டுவது என்பதெல்லாம் மனிதனை  இலகுவாகிவிடும் அப்படித்தான் இந்த சிறுகதைகள் நம்மைகை பிடித்து அழைத்துச் சென்று பல இடங்களைக் காட்டுபவை பல்வேறு விஷயங்களில் தவறான புரிதல்களைச் சுட்டிக்காட்டும் . கற்ற குழந்தைகளை வசீகரிக்கும் இந்த கதைகளை சரிதாவும் அவர் மகனும்  இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கிறது அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!


எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

நூல் தகவல்:

நூல் : கனவுக்குள் கண்ணாமூச்சி

வகை :   சிறார்  சிறுகதைகள்

ஆசிரியர் : சரிதா ஜோ

வெளியீடு :  சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு:  2022

பக்கங்கள் : 112

விலை:  ₹  130

 

சென்னை புத்தகக் காட்சியில் இந்நூல் கிடைக்கும் அரங்குகள்

 

புக்ஸ் ஃபார் சில்ரன்  F -18
நூல் வனம் ( வானம்) 176
யாவரும் பதிப்பகம் 11, 12
கலக்கல் ட்ரீம்ஸ் 37
டிஸ்கவரி புக் பேலஸ் F- 44
அம்ருதா பதிப்பகம் 164
தங்கமீன்கள் பதிப்பகம் 130

எழுதியவர்:

1 thought on “சரிதாஜோவின் “கனவுக்குள் கண்ணாமூச்சி” – சுப்ரபாரதிமணியன் வாழ்த்துரை

  1. எளிய மொழியில் சிறார் அக உலகமாக மாறி ஒலிக்கிறது சுப்ர பாரதி மணியனின் குரல். சச்சினுக்குள் கரைந்து தன் கதை உலகை சிறகு விரிக்கும் சரிதா ஜோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *