உலகளாவிய குழந்தை உளவியலிடமிருந்து தகாஷி முற்றிலும் வேறுபடுகிறார். பொதுவாக குழந்தை உளவியலின் தந்தை எனப் போற்றப்படும் ஸ்டான்லி ஹால் விலங்கின குட்டிகள் போலவே தாய் பராமரிப்பில் இருந்து பிரிக்கப்பட்டாலும் மனித குழந்தை ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்குப் பிறகு மனதளவில் முழு வளர்ச்சியை அடைகிறது என்கிறார். அறிஞர் லாக்கே ஒரு குழந்தை கற்றுக்கொள்வதும் அதன் நடத்தையும் அவர்களது வளர்ப்பு சூழலிய அனுபவங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றார். லாக்கேவின் கருத்தை ஏற்றுக்கொண்ட ஜான் வாட்சன் ஒருவரது நடத்தை அல்லது நடவடிக்கை தன்னிச்சையானது அல்ல. அது தூண்டப்படுகிறது – தன் அனுபவங்களின் பதிவுகளது அடிப்படையில் அவரது எதிர்வினை இருக்கும் என தன் ‘நடவடிக்கை கொள்கையை’ உளவியலுக்கு வழங்குகிறார். பிறப்பைவிட வளர்ப்பு முறையே முக்கியம் என்பது நடைமுறைக்கு வந்தது.
இவை இரண்டுமே போர் உருவாக்கி, வீதிகளில் விட்ட பெற்றோரை இழந்த குழந்தைகள் விஷயத்தில் கேள்விக்குள்ளாவதை பார்க்கிறோம். தகாஷி, குழந்தைகள் எதை நாடுகிறார்கள், தேடுகிறார்கள் என்கிற கோணத்தில் விஷயத்தை அணுகுகிறார். ஒரு குழந்தை பெற்றோரின் பராமரிப்பில் வளர்கிறது. அங்கே இருபுற உறவுப்பாதை உள்ளது. சட்டென்று பெற்றோர்கள் கொல்லப்படுகிறார்கள். குழந்தை யாருமற்றவர் ஆகிறது. ஒரு பராமரிப்பு இல்லத்தின் இயக்குநரை அப்பா என்று அழைக்கச் சொல்கிறார்கள், சமையல்கார தாதியை அம்மா என்று இங்குள்ள எல்லா குழந்தைகளும் அழைக்கிறார்கள். அந்த பராமரிப்பு இல்லத்தில் உடை, உணவு, நோய்க்கு சிகிச்சை, பாதுகாப்பு, கல்வி எல்லாம் உள்ளது. இருந்தாலும் தனக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் குழந்தைகள் அங்கிருந்து தப்பி ஓடுகிறார்கள். பாறைகள், சாலை ஓரங்கள், ரயில் நிலையங்கள் என எங்கும் படுத்து உறங்குகிறார்கள். உணவுக்கு அலைகிறார்கள். பஞ்சபராறைகளாக வாழ அவர்கள் தயங்கவில்லை. ஏன் என்று கேட்டுக்கொள்கிறார் தகாஷி.
பல காரணங்கள். தாய் தந்தை உறவு பற்றிய ஆழமான ஆய்வு இந்த நூலில் இடம் பெறுகிறது. பராமரிப்பு இல்லத்தில் அவர்கள் போலியாக புன்னகைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் நெஞ்சார அழுவது எவ்வளவு முக்கியம் என்று அவர் எழுதும் போது, “குழந்தை உடலடிப்படையில் தானாக வளர்கிறது. ஆனால் அதே குழந்தையை மனதளவில் வளர்த்தெடுப்பது சமூகம் தான்” என்று தோழர் லெனினுடைய துணைவியார் குழந்தை உரிமை போராளி குருப்ஸ்கயா சொன்னது நினைவுக்கு வருகிறது. பியாஜெட் கூட குழந்தைகளின் வளர்ச்சி படிநிலைகள் குறித்து கல்வி தரப்படும் முறையின் அடிப்படையில் ஆய்வு செய்தாரே ஒழிய, வீதிக் குழந்தைகள் – போர் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய ஆழமான சமூக உளவியல் நூலாக நாம் தகாஷியின் இந்த நூலைத்தான் பார்க்கிறோம்.
ஒரு பராமரிப்பு இல்லத்தின் தரம் அங்குள்ள வசதி வாய்ப்புகள்… குழந்தைகளின் உடை, நடத்தை, கல்வி இவற்றில் உள்ளதா என அவர் கேள்வி எழுப்பும் இடம் மிகவும் அழகானது. ஆனால் புனித பிரான்சிஸ் வழி நின்று தேவாலயம் நடத்தும் குழந்தை இல்லங்களில் இருந்து குழந்தைகள் ஓடிபோகாதது ஏன்? என்று நம்மை பார்த்து கேள்வியை அவர் வீசுகிறார். குழந்தைகள் எங்கே பாதுகாப்பாக உணர்கிறார்களோ, எங்கே அவர்களது உணர்வுகளுக்கு இடம் உள்ளதோ, எங்கே அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அதை வைத்துத்தான் அந்த இடத்தின் தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்கிறார். நம் கல்விக்கும் இது பொருந்தும்.
சூ.ம.ஜெயசீலன் அதை ஆங்கில வழி தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். நெருடாத எளிய மொழிபெயர்ப்பு. மருத்துவ சொற்கள் உளவியல் கூறுகள் போன்ற விஷயங்களில் அதிக கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.
மூல ஆசிரியர்: தகாஷி நாகாய்
ஆங்கிலத்தில்: மோரிஷ் எம். தாட்சுகோ மற்றும் சுனயோஷி தாகாய்
தமிழில்: சூ. ம. ஜெயசீலன்
விலை 190 ரூபாய்
வெளியிடப்பட்ட ஆண்டு : 2021
பதிப்பகம் : நல்லாயன் பதிப்பகம்
குட்பாஸ்டர் இன்டர்நேசனல் புக் சென்டர்
63,அர்மேனியன் தெரு, சென்னை-600001
சூ.ம.ஜெயசீலன் படைப்புகள்
கீற்று வெளியீடு
- பச்சைச் சருகுகள்
நியூ செஞ்சுரி பதிப்பகம்
- மலேசிய வேருக்குள் தமிழர் இரத்தம்
- ஈழ யுத்தத்தின் சாட்சிகள்
பாரதி புத்தகாலயம்
- உஷ்… குழந்தைங்க பேசுறாங்க
- இது நம் குழந்தைகளின் வகுப்பறை
(சிறந்த கல்வி நூல் விருது. சென்னை புத்தகத் திருவிழா-2017 மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது – Course EPC-Reading and Reflecting on Texts)
- காயம் போற்றும் காவியம்
- வாழ்வைத் திறக்கும் சாவி
வைகறை பதிப்பகம் (திண்டுக்கல் 0451-2430464)
- எந்தப் பிழையால் இந்தத் தலைமுறை
- திருநங்கைகள் : வாழ்வியல் – இறையியல்
- இஸ்ரயேல் – அகதிகளாய் அலைந்தவர்களின் வரலாறு
ஆனந்தா பதிப்பகம்
- புனித பீட்டர் தமியான்
- புனித சந்தியாகப்பர்
- அமைதியின் அருளோவியம் : அருளாளர் இரண்டாம் ஜான் பால்
நல்லாயன் பதிப்பகம் (சென்னை +91 8838982161)
- புனிதர்களோடு வழி நடக்க வழி நடத்த (மூன்று பாகங்கள்)
நண்பர்கள் வெளியீடு
- நாவலர் மன்றம்: ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் வரலாறு
மொழிபெயர்ப்பு
- நதி வாழ்வு நிறை வாழ்வு – ஆவணப்படம்
- என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு… (ஜப்பான் இலக்கியம்; நல்லாயன் பதிப்பகம் )
மேலும்.,
எட்டாம் வகுப்பு வளரும் இளமை நன்னெறி பாட நூலாசிரியர்களுள் ஒருவர்.