டாக்டர் டூலிட்டில் -க்கு எல்லா மொழிகளும் தெரியும்.  விலங்குகளை மிகவும் நேசிப்பவர். அவருக்கு கீ.. கீ என்ற குரங்கு நண்பனாக இருந்தது.

ஆப்பிரிக்க காட்டில் விசித்திரமான நோய் ஒன்று பரவி குரங்குகளை பாதித்தது. இந்த கீ… கீ குரங்கு அவரை காட்டுக்கு அழைத்து போய் குரங்குகளை நோயிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்தது. மருத்துவ ர் டூ லிட்டில் நல்ல முறையில் கவனித்து குரங்குகளை நோயிலிருந்து  காப்பாற்றினார்.

பிறகு டாக்டர் தனது சொந்த ஊருக்கு கிளம்புவதை தெரியப்படுத்தினார். அதைக்கேட்ட  குரங்குகள் வருத்தம் அடைந்தன. ஒரு நல்ல மனிதன் இங்கிருந்து ஏன் போக வேண்டும்? என கூடி கூடி பேசியும் விவாதித்தும் வந்தன.

ஆனால் டாக்டர்இன் நண்பரான கீ.. கீ மட்டுமே அவர் போக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வந்தது. அவருக்கான கடமையை இங்கு நிறைவேற்றி விட்டார். அவருக்கு ஊரில் நிறைய கடன் இருப்பதால் பணத்தையெல்லாம் அவர் திரும்ப செலுத்த வேண்டி இருப்பதால் அவர்  சொந்த ஊருக்கு போக வேண்டும் என்று எடுத்துக் கூறியது.

குரங்குகள் கும்பலாக எழுந்து பணம் என்றால் என்ன? என்று ஆச்சரியமாக கேட்டன. கீ.. கீ, மனிதர்கள் வாழும் ஊர்களில் பணம் இல்லாவிட்டால் எதையும் வாங்க முடியாது, அங்கு பணம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாது என்று மற்ற விலங்குகளுக்கு விளக்கியது.
பசித்தால் சாப்பிடவும், தாகம் வந்தால் தண்ணீர் குடிக்கவும் கூட அங்கு பணம் தேவைப் படுமா? என்று புரியாமல் கேட்டன மற்ற விலங்குகள்.

கீ… கீ ஆம் என்று மெதுவாக தலையை அசைத்தது.

பிறகு மருத்துவரை ஒரு பரிசுப்பொருளுடன் ஊருக்கு அனுப்பிவைத்தன.
அந்த பரிசுப் பொருள் இந்த உலகத்தில் இதுவரை யாருமே அறிந்திராத ஒன்று.

அதை அறிந்து கொள்ள வேண்டுமா நண்பர்களே, இந்த புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்கி படியுங்கள்.

பாரதி புத்தகாலயத்தில் வாங்கிய இந்த சிறிய நூலில் மொத்தம் 16பக்கங்களே உள்ளது.

குழந்தைகளுக்கும் இந்த கதையை அறிமுகப்படுத்தி வையுங்கள். இந்த லாக் டவுனில் இதைவிட நாம் அதிகம் வேறு என்ன செய்ய போகிறோம்?


-மஞ்சுளா
நூல் தகவல்:
நூல்: டாக்டர் டூலிட்டிலும் விநோத விலங்குகளும்
பிரிவு : சிறுவர் நூல்
ஆசிரியர்: ஹூ லா ஃபிங்
தமிழில்: கூத்தலிங்கம்
வெளியீடு: புக் ஃபார் சில்ரன்
விற்பனை உரிமை பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் :
விலை : ₹ 10

எழுதியவர்:

1 thought on “டாக்டர் டூலிட்டிலும் வினோத விலங்கும் – ஒரு பார்வை

  1. சிறப்பான திறனாய்வு.
    நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *