லாவண்யா சுந்தரராஜனின் பதினோரு கதைகள் அடங்கிய “புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை” என்னும் இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தர அல்லது மேல் நடுத்தர குடும்பத்துப் பெண்களது அகவுலகை நமக்குக் காட்டுபவை. பூ விற்கும் பெண்ணும் கிராமத்து விவசாயக் குடும்பத்துப் பெண்ணும் மையப்பாத்திரங்களாக அமைந்த கதைகளும் உண்டு என்றபோதும் மேற்சொன்ன அடையாளமே தொகுப்புக்குப் அதிகம் பொருந்தி வருவது. இக்கதைகளை வாசிக்கையில் சம்பவங்கள் ஊற்றுப்போல பெருகியபடியிருக்க அதனிடையே கதைமாந்தர்கள் உலாவியபடியும் இடைவிடாது பேசியபடியும் இருப்பதுபோன்ற ஒரு சித்திரம் மேலெழுந்து வருகிறது. தம்போக்கிலான இம்மனிதர்களையும் சம்பவங்களையும் கதையாசிரியர் பின்னியிருக்கும் விதத்தில் இவை சமகாலத்தின் முக்கியமான சிறுகதைகளாக்கியிருக்கின்றன.
பிரிவு : சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: லாவண்யா சுந்தரராஜன்
பதிப்பகம்: காலச்சுவடு
வெளியிட்ட ஆண்டு : 2019
விலை: ரூ 150