Member Directory
வே. மு. பொதியவெற்பன் (பொதிகைச் சித்தர் என்றும் அழைப்பர்) என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், பிழைதிருத்துநர், பிரதிமேம்படுத்துநர், மாநாடுகளிலும் அரங்கக் கூட்ட வாயில்களிலும் புத்தகங்கள் விற்பவர், கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர் போன்ற பன்முகத் தன்மை உடையவர்.
முனைவன் என்ற சிற்றிதழை எண்பதுகளில் நடத்தி வந்தவர். தமிழ்ச் சிற்றிதழ் முன்னோடியான மணிக்கொடி இதழின் பொன்விழா மலரைக் கொண்டுவந்தவர். சிலிக்குயில் புத்தகப் பயணம் என்ற பதிப்பகத்தை நடத்தியவர். புதுமைப் பித்தன் ஆய்வாளர் மற்றும் நிகழ்த்துக் கலைஞர்.