Member Directory
சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் எழுதிய “வெண்ணிலை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
சா. தேவதாஸ் தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், விமர்சகரும் ஆவார். பபானி பட்டாச்சார்யாவின் "லடாக்கிலிருந்து கவிழும் நிழல்" என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததற்காக 2014ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் நடையனேரியைச் சேர்ந்த சா. தேவதாஸ் இராசபாளையத்தில் வசித்து வருகிறார். 1975 - 77 காலகட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பயின்ற இவர் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இதுவரை இருபத்தைந்து நூல்களை மொழிபெயர்த்திருப்பதோடு ஆறு கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.