Member Directory
இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.
இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.
சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.
நாகப்பட்டினத்தை சார்ந்த ரா. தீபா ராஜ்மோகன் M. Sc., B. ed., M. phil.,(இயற்பியல் துறை ) கல்விப் பட்டங்களை பெற்றவர். காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராக பணி செய்திருக்கிறார். பட்டிமன்ற பேச்சாளராகவும் உள்ள இவர் புத்தகங்களை வாசிப்பதும், வாசித்த புத்தகங்கள் குறித்து விமர்சனங்கள் எழுதுவதிலும் ஆர்வம் உடையவர்.
மதுரையை சார்ந்த பா.மகாலட்சுமி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்& கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டக் குழுவிலுள்ளார். இதுவரை இவரின் இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.
1. குளத்தில் மிதக்கும் சிறகு,
2. கூழாங்கற்கள் உருண்ட காலம்