திரை துறை சார்ந்த பெண்களின் நிலையை சொல்லும் ஒரு கதை. இள வயதில் கொண்டாடப்படும் ஒரு நடிகை வயது முதிர்ந்து உடல் தளர்ந்த பிறகான நிலையை ஒரு மெல்லிய வலியோடு சொல்லும் கதை இது.

டைரக்டரையே மிரட்டும் தொனியில் செயல்படும் நடிகை எழுத்தாளரின் சொல்லுக்கு செவி கொடுப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதாவது எவ்வளவு தான் தன்னை அடங்கா பிடாரியாக அடாவடித்தனமாக காட்டிக்கொண்டாலும் எழுத்தாளருக்கான மரியாதை வழங்குவது அழகு.

Flash back ல் போகிறது கதை. ட்ரைவர், எழுத்தாளர், வனிதா, பானு நால்வரும் காரில் வரும்போது வனிதா பானுவின் உரையாடல் சிறு பிள்ளைகளைப் போல இருந்தது என்று தாசன் நினைப்பதாக வரும். பெண்கள் எவ்வளவு சாதித்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் மலரும் நினைவுகளை நினைவு கூறும் போது சிறு பிள்ளையாகிவிடுவது தானே இயல்பு.

அவரின் மாங்காய் தோப்பும் மாங்காய் ஊறுகாயும் பற்றியான பேச்சுகள் நாவில் எச்சில் ஊறத்தான் வைக்கின்றன.

இப்போது சீரியல் நடிகைகளாகவிட்ட இவர்கள் சினிமாவுக்கு வந்த புதிதில் கவர்ச்சி கன்னிகள். அவர்களை பார்த்து ஏங்கியவர்களில் ஒருவரான எழுத்தாளர் அந்த நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த நாட்களை நினைவு கூறும் எழுத்தாளர், “அது கனவுகளின் பிரம்மாண்ட ஊர்வலம்” என்றும் பாதாளம் சென்று திரும்பி வந்த அனுபவங்கள்” எனவும் குறிப்பிடுகிறார்.

ஒரு கட்டத்தில் flash back முடிகிறது.

காமம் என்பது மனிதனின் மிகப்பெரிய பலவீனமாகி போனதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்.

தொடர்களில் பெரிதும் ஈடுபாடு இல்லாத தாசன் பின்னொரு நாளில் web series க்கு கதை எழுதுகிறார். அவர் சொல்லும் ஒரு காட்சி அமைப்புக்கு எல்லோரும் பதறுகிறார்கள்.

இன்னும் இருக்கும் மற்ற நடிகைகளின் வாழ்க்கை முறை தாசனை இன்னும் கூட கதை எழுத வைக்கும் என்று எதிர்பார்பை ஏற்படுத்துகிறார் மணி. M. K. மணி.

தாசனின்அடுத்த கதைக்காக காத்திருப்போம்…!

வாழ்த்துகள்.


வாசுகி தேவராஜ்

இந்த சிறுகதையை வாசிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *