நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும், செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும், சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் ஒன்றே பொது. ஒவ்வொருவரின் மரணத் தருவாயிலும் அவரவரிடம் மிஞ்சி நிற்கப் போவது எஞ்சிய நினைவுகள்தான். ராஜராஜன் என்ற சூரியனுக்கடியில் கரு நிழலென மறைக்கப்பட்டது ராஜேந்திரனின் தன்னொளி. மிகப் பெரும் வெற்றியாளன். ஆனால், எப்போதும் தோல்வியின் கசப்புடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவன். ராஜேந்திரனின் துயர நினைவுகளின் வேர் தேடிச் செல்லும் பயணமே இந்த ‘கங்காபுரம்’ நாவல்.
நூல் : கங்காபுரம்
பிரிவு : நாவல்
ஆசிரியர்: அ.வெண்ணிலா
பதிப்பகம் : அகநி வெளியீடு
வெளியான ஆண்டு : டிசம்பர் 2018
பக்கங்கள்: 520
விலை : ₹ 450
அமெசானில் நூலைப் பெற
* இந்நூல் குறித்து விகடன் இணையதளத்தில் வெளியான விமர்சனம் வாசிக்க இங்கே சொடுக்கவும்.