ந்திர நீலம்’ தொகுப்பில் எட்டுச் சிறுகதைகள் உள்ளன. இதிகாச காலந்தொட்டு, நவீன காலம்வரை பெண்ணின் மனப்பக்கங்களில் வாசிக்கப்படாதவைகள் ஏராளமாக உள்ளன.

நீண்ட நெடிய மரபின் ஆதர்சனமான பெண்களின் மனப்பக்கங்களை வாசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் எழுதிப் பார்த்தவைதான் இந்திர நீலத்தின் கதைகள்.

விடுபட்ட, நிறைவேறாத, தோற்றுப்போன காதலைப் போலவே காமமும் இருக்கிறது. சமையலறையின் எண்ணெய்ச் சிகிடுகளையும் மங்கிய ஒளியையும்விட, படுக்கையறையின் கண்ணுக்குத் தெரியாத சிகிடுகுகள் அதிகம். காமத்தின் மீதான அதீத கட்டுப்பாடுகளும் வரையறைகளும் நான்கு சுவரின் இறுக்கங்களும் சேர்ந்து, அதொரு அரிய வகை விலங்கைப் போலவே நம் வாழ்வோடு பயணித்து வருகிறது.

இன்றைய நவீனப் பெண்ணின் நிலையை அடைய, முந்தைய தலைமுறை பெண்கள் கடந்து வந்துள்ள கடுமையான பாதையைத் திரை விலக்கிக் காட்டுகின்றன இக்கதைகள்.

நூல் தகவல்:

நூல் : இந்திர நீலம்

பிரிவு :  சிறுகதைகள்

ஆசிரியர்: அ.வெண்ணிலா

பதிப்பகம் :  அகநி வெளியீடு

பக்கங்கள் : 216

வெளியான ஆண்டு :  2020

விலை :  ₹ 150