அசாத்தியம் செய்யும் வார்த்தைகள்
ஒன்றை சொல்ல வேண்டுமெனில் ஆயிரம் முறையும், எழுத வேண்டுமெனில் பல்லாயிரம் முறையும் சிந்திக்க வேண்டும். என்பது அனுபவப்பட்டவர்களின் வாக்கு. காரணம் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பதால்.
இதனை மனதில் நிறுத்தியே ஒவ்வொரு பதிவையும் இப்புத்தகத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் பதிவுகள் போல் உலகம் இருக்க வேண்டிய அவசியமில்லை .ஆனால் உலகத்தில் இருப்பதைத்தான் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.
தன்னை மீட்கத் தெரிந்தவர்கள் இழந்த அனைத்தையும் மீட்பார்கள் என்பது என் அனுபவ வாக்கு. அதுபோலவே, எழுத தெரிந்தவர்களால் சமூகத்தை மீட்கவும் முடியும் என்பது சமூகத்தின் அனுபவ வாக்கு.
இங்கே பதியப்பட்ட அனைத்தும் அறிவுரைகள் அல்ல எச்சரிக்கை. “இப்படித்தான் இருக்க வேண்டும்” என்பது அறிவுரை. “இப்படியும் இருக்கும்” என்பது எச்சரிக்கை..
ஏனெனில், சரிவராத மனிதர்கள் என இங்கே யாருமில்லை. சரியாக பேசத்தெரியாமல் மனிதர்களை இழப்பவர்களே இங்கு அதிகம். அப்படியான மனிதர்களின் மனங்களை புரியவைக்கும் சிறு முயற்சியே இந்த புத்தகம்.
ஒவ்வொரு பதிவையும் நான்கைந்து வரிகளில் சுருக்கமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. 124 பதிவுகளில் ஒன்றாவது உங்கள் மனதை தொட்டாலும் அது இந்த ‘பீ கேர் ஃபுல்’ புத்தகத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.
மனித வாழ்வின் எச்சரிக்கையை ஒவ்வொரு பதிவிலும் நிறைய அன்பு கலந்தும் கொஞ்சம் அழகியலோடும் கொடுத்திருக்கிறேன் வாசித்து இளைப்பாறுங்கள்..!!
எனது முந்தைய கவிதை தொகுப்பான பேனா முனைப் பிரபஞ்சம், சிறுகதை தொகுப்பான மூன்று காரணங்களும் முன்று குறிப்புகளும் நண்பர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மூன்றாவது தொகுப்பு இந்த வாழ்வியல் தத்துவப் புத்தகம்..!!
அன்புடன்
மதுரை சத்யா
நூல்: | பீ கேர் ஃபுல் |
பிரிவு : | வாழ்வியல், |
ஆசிரியர்: | மதுரை சத்யா |
வெளியீடு: | செங்கனி பதிப்பகம் |
வெளியான ஆண்டு: | செப்டம்பர் 2021 |
பக்கங்கள்: | 128 |
விலை: | ₹ 100 |
https://vimarsanam.in/product/be-careful/