சிறுகதைகள்நூல் அலமாரி

மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்


சோக்ராஜ்ஜின் “மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்” சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் கணேசகுமாரன் எழுதிய அணிந்துரை

கண்ட கேட்ட கதைகள்!

‘நம் முன்னோர்களின் வடிவில் கதை சொல்லிகள் மறைந்துவிட்ட இக் காலகட்டத்தில் இலக்கியம் புதிது புதிதான கதையாளர்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தான் கண்ட, கேட்ட, அனுபவித்தவற்றைக் கதையாக்கியிருக்கிறார் நூலாசிரியர் அசோக்ராஜ். 80களின் எழுத்தாளன் பாணியில் சில கதைகளும், விடிவி கௌதம் மேனன் பாணியில் சில கதைகளும், விரைவு உணவு தயாரிப்பில் வெளிவந்துள்ளன. இந்த எழுத்து அனுபவத்தை முன் வைத்து இன்னும் சிறப்பான கதைகள் எழுத என் வாழ்த்துகள்!’

 


ந்தத் தொகுப்பில் நான் விடாப்பிடியாக இன்றும் எழுதும், எழுத முயற்சிக்கும் குறுங்கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. பல விதமான பாணிகளை பரிட்சித்துப் பார்த்திருக்கிறேன். இப்படி ஆரம்பிக்க வேண்டும், இப்படி முடிக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்ற எந்த லகானும் இல்லாமல் எழுதப்பட்டவை.

ஜலஜாவின் டைரியிலிருந்து என்ற ஒரே தலைப்பில் பல்வேறு வயதுப் பெண்களின் பிரச்சனைகளை ஒரு டைரிக் குறிப்பு போல குறுங்கதைகளாக முக நூலில் எழுதினேன்.  பெண் இயல்பில் பெண் டைரி எழுதுவது போல் அமைந்த ஜலஜாவின் டைரியிலிருந்து என்ற குறுங்கதைத் தொடர் பிற்பாடு அகல் மின்னிதழில் தொடராக வந்தது. முக நூலில் எழுதிய போதும், அந்த மின்னிதழில் தொடராக வந்த போதும் எனக்கு நல்ல பாராட்டைப் பெற்றுத் தந்தது.  சிவாட்ஸ் அப் கதைகள் என்று பல விதங்களில் புனைவு, அதி புனைவுக் குறுங்கதைகளை முக நூலில் எழுதினேன். இரண்டு வகைமையும் எழுதிய காலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த கதைகள் எல்லாமே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். போலவே சற்று எழுதிப் பார்க்கவும் புதிய எழுத்தாளர்களைத் தூண்டும் இயல்புடையவை.  இப்படி நாமும் எழுதிப் பார்க்கலாமே என்று வாசகனும், சக எழுத்தாளனும் கூட முயற்சித்துப் பார்க்கத் தூண்டும் கதைகளே இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.

அசோக்ராஜ்


 

நூல் தகவல்:
நூல்: மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்
பிரிவு : சிறுகதைகள்
ஆசிரியர்: அசோக்ராஜ்
வெளியீடு: கோதை பதிப்பகம்
வெளியான ஆண்டு  2021
 பக்கங்கள் : 112
விலை : ₹ 140

 

நூலாசிரியர் குறித்து:

அசோக்ராஜ்

இயற்பெயர் சிவக்குமார். சென்னையில் பங்கு வர்த்தகம் சார்ந்த நிறுவனமொன்றில் நிதி ஆலோசகராக பணிபுரிகிறார்.  கல்லூரிக் காலத்திலிருந்து சிறுகதைகள், கவிதைகள், குறுங்கதைகள் எழுதி வருகிறார்.

இவரது படைப்புகள், வார இதழ்கள், இணைய இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன.  ‘மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்’ இவரது இரண்டாவது கதைத் தொகுப்பாகும். 2020ல் ‘நிகழ்தகவு’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

கிண்டில் வெர்சனில் ‘பதுமை’ என்ற நாவல் 2020ல் வெளியாகியிருக்கிறது.

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *