வந்தவாசிப் போர் 1760 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி ஊரில் இருக்கும் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்த போராகும். ஆங்கிலத் தளபதி அயர் கூட் தலைமையிலான படை பிரெஞ்சுச் தளபதி தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான படையைத் தோற்கடித்தது. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்தனர். இந்த வெற்றி இங்கிலாந்து நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. 22.1.1760 அன்று இங்கு நடைபெற்ற போரில், ஆங்கிலேய படைகள் வென்றதன் தொடர்ச்சியாகவே, இந்தியாவை 187 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் நிலை உருவானது.
இப்போரைக் குறித்த எழுதப்பட்ட நூல் “வந்தவாசிப் போர்-250”
நூல் தகவல்:
நூல் : வந்தவாசிப் போர்-250
பிரிவு : வரலாறு
ஆசிரியர்: டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப , அ.வெண்ணிலா
பதிப்பகம் : அகநி வெளியீடு
பக்கங்கள்: 168
வெளியான ஆண்டு : 2010
விலை : ₹ 250