Member Directory

நர்மி என்ற பெயரில் எழுதி வரும் நர்மியா 1991 ஆம் வருடம் மதுரையில் பிறந்தவர்.  கல்கத்தா ஜதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுகலை பட்டபடிப்பை பயின்றவர். கல்கத்தா நாட்கள் எனும் பயணக்கட்டுரைத் தொகுப்பு நூலும் , பனிப்பூ எனும் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிட்டு இருக்கிறார்.

கவிஞர் கலாப்ரியா, தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர். கலாப்ரியாவின் இயற்பெயர் தி. சு. சோமசுந்தரம் ( பிறப்பு : 30 – 07 – 1950 ). நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணி நிறைவு பெற்றவர். வண்ணநிலவனின் கையெழுத்து  இதழான “பொருனை” யில் கவிதை எழுதும் போது தன் இயற்பெயரான ’சோமசுந்தரம்’ என்ற பெயரை  ‘கலாப்ரியா’ என்று மாற்றிக் கொண்டார். இவரின் பல கவிதைத் தொகுப்புகளும், கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகி இருக்கின்றன. சிறுகதைகள், புதினங்களும் எழுதி உள்ளார்.  தமிழக அரசின் “கலைமாமணி விருது”, கவிஞர் “சிற்பி இலக்கிய விருது” , 2010ஆம் ஆண்டு “விகடன் விருது”, சுஜாதா விருது” , 2012ல் “கண்ணதாசன் இலக்கிய விருது”, 2017இல் கலைஞர் மு. கருணாநிதி “பொற்கிழி விருது” , 2017இல் “மனோன்மணியம் சுந்தரனார் விருது” , 2018 இல் “ஜெயகாந்தன் விருது” ஆகிய விருதுகள் இவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.

கவிஞர் சுகன்யா ஞானசூரி. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசிக்கிறார், தனியார் ஆய்வகத்தில் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிபவர். இவரின் அலைகளின் மீதலைதல் மற்றும் நாடிலி கவிதைத் தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.

 

கோவையைச் சார்ந்த பாரதி சித்ராவின் இயற்பெயர் சித்ரா, தீவிர இலக்கிய வாசிப்பாளரான இவர் கல்கி, கோவை ஹெரால்ட் போன்ற இதழ்களில் விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உடையவராக உள்ளார். இவரின் கவிதைகள் நுட்பம் - கவிதை இணைய இதழில் வெளியாகி இருக்கிறது.