Member Directory
பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் கணினித் துறையில் பணிபுரியும் கவிஞர் நந்தாகுமாரன் பிறந்த ஊர் கோவை. இலக்கியம், ஓவியம், ஒளிப்படம் போன்ற கலைத்துறைகளில் ஆர்வமுள்ள இவர், ‘மைனஸ் ஒன்’ ( உயிர்மை வெளியீடு - 2012), பாழ் வட்டம் ( காலச்சுவடு பதிப்பகம் -2021) உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், மின்னூல் பதிப்பாக ‘நான் அல்லது நான்’ சிறுகதைத் தொகுப்பு நூல், ‘ கலக லகரி’ ( கவிஞர் பெருந்தேவியின் எதிர்கவிதைகள் முன்வைத்து எழுதப்பட்ட ரசனை பதிவுகள்) உள்ளிட்ட நூல்கள் வெளியாகி உள்ளன. ஹைக்கூ வகை கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய நந்தாகுமாரன் அயல் மொழிகளிலுள்ள கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து அளித்தது கவனத்திற்குரியது. பயணம் சார்ந்த புனைவுகளை எழுதும் ஆர்வமுடைய இவர் தற்போது ‘ரோம் செல்லும் சாலை’ எனும் புனைவு நூலை எழுதி வருகிறார்.
பயிரியல் மற்றும் பயிர் தொழில்நுட்பவியல் துறையில் இளங்கலை பட்டம் முடித்து, தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பயின்று வரும் மாணவர். அறிவியல், கலை, இலக்கியம், இசை, மானுடவியல் குறித்து தீவிர ஆர்வம் கொண்டவர். பேச்சு, எழுத்து, கவிதை என்று தமிழ் இலக்கிய வெளியில் சிறு வயது முதல் இயங்கி வரும் இவர் சிறுகதைகள், இலக்கிய நூல்கள் குறித்தான விமர்சனங்களை தொடர்ந்து அளித்து வருகிறார்.
தமிழின் நவீன இலக்கிய வெளியில் நவீன கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, பத்திரிக்கையாளராக, விமர்சகராகத் தொடர்ந்து 25 -க்கும் மேற்பட்ட வருடங்கள் இயங்கி வருபவர்.
அரசு மகளிர் பள்ளியின் ஆசிரியராக சந்தைப்பேட்டையில் பணிபுரிகிறார்.
வீதி கலை இலக்கியக் களம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இவர், சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். படைப்பாளராக கவிதைத் தொகுப்புகள் உட்பட ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளார் . டிசம்பர் 2021 இல் “உலகப் பெண் கவிஞர் யார்? எவர் ? “ எனும் கட்டுரை தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
தாரிகை எனும் பெயரில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதும் இவரின் இயற்பெயர் ரஞ்சிதா ரவி. பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தவர். இளம் வயதிலேயே மாணவ பத்திரிக்கையாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர், 6 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருகிறார். பெண்ணியம், தலித் அரசியல் மற்றும் தலித் இலக்கியச் சூழலில் இயங்கி வருபவர். சமூகம், அரசியல், உடல்நலம், உறவுகள், பெண்கள் மற்றும் தலித் அரசியல் குறித்தும் எழுதிக் கொண்டிருப்பவர்.
இயற்பெயர் பாக்கியராசா மிதுர்ஷன். நீலாவணை இந்திரா எனும் புனைபெயருடன் படைப்புகளை எழுதிவருகிறார். கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு மாணவர்