Member Directory
சென்னை- திருவல்லிக்கேணியைச் சார்ந்த பிரியா ஜெயகாந்த் தொழில் நுட்ப துறையில் பணியாற்றுகிறார். த.மு.எ.க.ச அறம் கிளை உறுப்பினராக உள்ள இவர் சிறுகதை, கவிதை, ஹைக்கூ போன்ற இலக்கியப் படைப்புகள் எழுதும் அனுபவம் பெற்றவராக திகழ்கிறார். நூல் விமர்சனம் எழுதுவதிலும் பெரும் விருப்பமும் அனுபவமும் உள்ளவர்.
சிறந்த வாசிப்பாளரான மைதிலி கல்யாணி சிறுகதை எழுத்தாளராகவும் திகழ்கிறார். பெண்ணியச் செயல்பாட்டாளரான இவர் த.மு.எ.க.ச அமைப்பின் விருதுநகர் மாவட்ட துணைத் தலைவராகவும் உள்ளார்.
“பத்மப்ரியா பாஸ்கரன்” எனும் இயற்பெயருடைய பிரியா பாஸ்கரன்மிச்சிகன் மாகாணம், வட அமெரிக்காவில் பொது நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார்.
“நினைவில் துடிக்கும் இதயம்”, “காற்றின் மீதொரு நடனம்”, “சலனமின்றி மிதக்கும் இறகு”, “The Horizon Of Proximity” மற்றும் தமிழ் ஆர்வலர்கள் குழு வெளியீட்டில், “பால்யத்தின் சாவி” கவிதை நூலும், வல்லினச் சிறகுகள் வெளியீட்டில், “ஒரு கவிஞனும் பல கவிதைகளும்” தொகுப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார்.
திருப்பூரைச் சார்ந்த வித்யா கண்ணன். கார்மெண்ட்ஸ் நிறுவனமொன்றில் மார்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். ஓய்வு நேரத்தில் இலக்கியம் சார்ந்த நூல்களை வாசிக்கும் பழக்குமுடைய இவர் நூல் விமர்சனங்களை எழுதி வருகிறார். கதைகள் கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வமுள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார்.