ந்து தமிழ் திசையில் வெளிவந்த யானைகளின் வருகை என்ற தொடரின் முதல் பாகம் ஏற்கனவே புத்தகமாக்கப்பட்டுள்ளது .பொதுவாகவே யானை – மனித மோதல்களை முன்பு அரிதாக இருந்தது தற்போது அது தினசரி நிகழ்வாகிவிட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, ஆனைகட்டி, வாளையார், சத்தியமங்கலம், பகுதிகளில் தினசரி நிகழ்வு.. இதில் மனிதனோ, வன உயிரோ இறக்கும் போது செய்தியாகிறது. செய்தியாகாமல் செத்த காயப்பட்ட உயிர்கள் எத்தனை..??!!!  இந்த தொடர் அதை வெகு நேர்மையாக பதிவு செய்திருக்கிறது.  வனப்பேருயிர் ஏன் வனத்தை விட்டு வெளியேறுகிறது., மனித காரணம் மட்டுமின்றி சூழலியல் காரணத்தையும் நேர்ரையாக பதிவு செய்திருக்கிறது. வாரம்தோரும் தொடராக வெளிவந்த இந்த தொடரின். இரண்டாம் பாகம் குறித்த மதிப்புரை இது.


பொதுவாக மேற்கு தொடர்ச்சிமலையோர கிராமங்களில் யானை மனித மோதல் ஏற்படும் போதெல்லாம் அது ஒரு நாள் பரபரப்பு செய்தியாகி அடங்கும். இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பேருயிர்களை தான் வில்லன் போல சித்தரித்து “யானைகள் அட்டகாசம்!!!” என்ற தலைப்பில் செய்தி வெளியாகும். ஆனால் நிஜத்தில் யானைகள் படும் பெருந்துயர் சொல்லில் அடங்காது.

“யானை என்பது நடமாடும் வனம் “

யானை பல்லுயிர் சங்கிலியின் ஆதாரகன்னி.. யானை பாதிக்கப்பட்டால் ஒரு வனம் பாதிக்கப்படுகிறது, அழிகிறது எனப்பொருள். அறிய வகை வனவிருட்சங்கள் யானையினால் மட்டுமே விதைபரவலாக்கம் மூலம் பரப்படுகிறது. சூழலியலில் வன உயிர்கள் அத்தனையும் முக்கியம் அதில் நடமாடும் வனம் எனும் இந்த பேருயிர் தான் ஆதார கன்னி.வனத்தில் ஏற்படும் சிறுமாற்றம் கூட வன உயிர்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது என நூல் விவரிக்கிறது.

மேற்குதொடர்ச்சி மலையை. அதன் வளத்தை, முக்கியத்துவத்தை, சூழலியல் கேட்டை,  அதன் பாதிப்பை என அத்தனையும் மிக நேர்மையாக பதிவு செய்திருக்கிறார் ஐயா திரு. கா.சு. வேலாயுதன். இது ஏதோ ஓரிடத்தில் அமர்ந்தபடி தகவல்களை கேட்டு எழுதியதல்ல.  ஒருபுறம் மேற்கே சிறுவாணி தொடங்கி வைதேகி அருவி, மருதமலை, ஆனைகட்டி, சிறுமுகை, மேட்டுப்பாளையம், நீலகிரி வரை வடக்கே விரிகிறது மறுபுறம் கோவை குற்றாலம் தொடங்கி குனியமுத்தூர், மதுக்கரை, வாளையார் வரை தெற்கே நீள்கிறது. ஆக மிக துல்லியமாக யானையின் வலசை மொத்தமுமே அலைந்து திரிந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. சூழலியல் குறித்து இத்தனை வெளிப்படையான விரிவான கட்டுரை கொண்டு வந்த இந்து தமிழ் திசைக்கு வாழ்த்துகள்.

இந்த இரண்டாம் பாகத்தில் வலசை பாதை பற்றி மட்டுமல்லாமல் இந்த பேருயிர் ஏன் வனத்தை விட்டுவெளியேறுகிறது என்பதை விரிவாக அலசியுள்ளது. ஒரு கட்டடம் கட்டுவதால் என்ன பிரச்சனை என கேட்போர் இதை வாசித்து தெளிவடைக. பாதையில் கட்டப்படும் கட்டடம், பல்கலைக்கழகம், ஆசிரமங்கள், தங்கும் விடுதிகள், நீர் விளையாட்டு விடுதி ஆகியவற்றால் உண்டாகும் பாதிப்புகள் மட்டுமல்லாது வனத்தில் யானையின் உணவு பற்றாக்குறையை சுட்டிக்காட்டுகிறது. வனத்தில் யானைக்கு உணவில்லையா என கேட்போருக்கு.. ஆம்! யானைக்கு உணவில்லை தான். வழமையான அரிசி உணவின்றி தொடர்ந்து மிக குறைந்த அளவே ஜங்க் உணவு தின்றால் நமக்கு எப்படி இருக்கும் என்னென்ன விளைவு ஏற்படுமோ அப்படித்தான்.. யானையும் அதன் உணவு குன்றியதால்.. வேறு வழியின்றி கிடைத்ததை உண்டு குடற்புழுவாலும் ஒவ்வாமையாலும் ஆரோக்யமும் ஆயுளும் குறைந்து சாகிறது. யானை உன்னக்கூடிய விருட்சங்கள், தாவரங்ள் வனத்தில் குறைந்து அந்த இடத்தில் உனிச்செடியும் பார்தீனியமும், சீமைக்கருவேலமும் ஆக்கிரமித்துவிட்டது சூழலியல் பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். தவிர ஆக மோசமான சல்லிப்பயலாகிய நாம் அந்த பேருயிரின் உணவு பட்டியலை எப்படி மாற்றியிருக்கிறோம் என இதைவாசித்தால் தெரியும்.

வன சுற்றுலாவில் உப்பும் புளியும் திண்று பழகிய யானை தன் உப்பு தேவைக்கு அதுவரை திண்ற நதியோர உவர்மன் திண்ணாமல் நம்மை எதிர்பார்க்க வைத்தோம். அடுத்து சாராய வியாபாரிகள் ஏற்படுத்திய சீர்கேடு பனைசோறு திண்று தள்ளாடும் நிலைக்கு தள்ளினோம். குவாரிகளால், சூளைகளால் அளவு மீறி வெட்டி எடுத்த விளைவு அந்த படுகுழியில் வீழ்ந்து செத்த பேருயிர்கள் எத்தனை..??

ஆலைகழிவு, சாக்கடை கழிவுகளை நதியில் கலந்துவிட்டு அதை குடித்து குடற்புழுவாலும் நோயாலும் சாகிறது வன உயிர்கள். தவிர வேட்டைகாரர்கள், நாட்டு வெடிகுண்டு போன்றவற்றால் படும் வேதனை சொல்லி மாளாது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகளை தீவிரமாக பேசவும் அதற்கு தீர்வை திறந்த மனத்தோடு தேடவும் முனைய வேண்டிய நேரமிது..! சூழலியல் குறித்த அக்கரையும் வன உயிர்கள் மீதான தெளிவும் வேண்டுவோர் நிச்சயம் இந்த புத்தகத்தை வாங்கி வாசித்து தெளியலாம்.

வாழ்த்துகள் கா.சு.வேலாயுதன் ஐயா.


பாரதி சித்ரா

நூலாசிரியர் குறித்து

கா.சு.வேலாயுதன் : எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சிறுகதைகள், நாவல், செய்திக்கட்டுரைகள் என எழுத்தில் 40 ஆண்டுகாலமாகப் பயணிப்பவர். கல்கி, குமுதம், தினமலர், இந்து தமிழ் திசை, காமதேனு ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.

1994 -ல் தூர்தர்ஷனின் எதிரொலி விருது, 2000-ல் திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த நாவல் விருது, 2010 ல் லாட்லி நிறுவனத்தின் சிறந்த புலனாய்வு நிருபருக்கான விருது, சிறந்த சமூக செயல்பாடுகளுக்கு 2019 கோவை சங்கமம் விருது, 2020 -ல் நாஞ்சில் நாடன் விருது எனப் பல அங்கீகாரங்கள் இவரை வந்தடைந்துள்ளது.

நூல் தகவல்:

நூல் :  யானைகளின் வருகை - பாகம் 2

இந்து தமிழ்திசை இணையதளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு

வகை :  கட்டுரைகள் | காட்டுயிர் | சூழலியல்

ஆசிரியர் :  கா.சு.வேலாயுதன்

வெளியீடு :  கதை வட்டம் வெளியீடு

ஆண்டு : 2022

பக்கங்கள் :  224

விலை:  ₹  220

நூலைப் பெற தொடர்புக்கு :  +91 9994498033

குறிப்பு :  ‘கல்கி’ வார இதழில் வெளியான இந்த விமர்சனம். எழுதியவரின் உரிய அனுமதியுடன் ‘விமர்சனம்’ இணையதளத்தில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *