Member Directory

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி  திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய  கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “  (கடல் பதிப்பகம் வெளியீடு) 

 

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய எழுத்துப் பயணத்தில் பயணிப்பவர். கவிதை, கட்டுரை, விமர்சனங்கள் என பன்முகத் தளங்களில் இயங்கி வருபவர். நாடகத்துறையில் எழுத்து, நடிப்பு, இயக்கம் எனும் செயல்பாட்டுடன் நாடகப் பயிலரங்கு பட்டறையும் இயக்கி வருகிறார். ஊடகப் பிரபலங்களுடன் நடித்த அனுபவமும், தொலைக்காட்சி தொடர்களின் இயக்க அனுபவமும் கொண்டவர். சிறுபத்திரிக்கை செயபாடு கொண்ட இவரின் "தென்றல் புழங்கிடும் தெரு" எனும் கவிதைத் தொகுப்பு சமீபத்தில் "குவிகம்" பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.
மின்னஞ்சல் : [email protected]
அலைபேசி : 9600015880

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர்