மிகவும் பொறுமையாக வலிமையான கருத்துகளோடு நகர்த்திச் சென்றது. இதனை வாசிக்கும் நேரத்தில் பல விடயங்கள் நேரத்தைப் பற்றிக்கொண்டது இருந்தும் மார்க்சியக் கருத்துகள் போல் நிலைத்திருக்கவில்லை …

இந்த புத்தகம் வெறும் 95பக்கங்களைக் கொண்டது தான் மார்க்சியம் மதம் பற்றிக் கூறியதா என்று என்னிடம் தொற்றிக் கொண்டிருந்த கேள்விக்கும் பதில் உறைத்தது…17பிரிவுகளாகப் பிரித்து மார்க்சியத்தை ஆசிரியர் விளக்குகிறார்.

“மனிதனை மதம் ஆளத் தொடங்கியது அவன் தன்னை அடிமையாக அர்ப்பணித்தான் மதம் மனிதனுக்குக் கம்பி இல்லாத சிறையானது “ உலகத்தை மனிதனால் மாற்ற முடியுமா? முடியும் அது தான் மார்க்சியம்..

உற்பத்தி எப்படி மனிதனைத் தீர்மானிக்கிறது என்றால் அந்தக் காலத்தில் இருக்கும் வாள்,கம்புடன் இப்போது இருக்கும் பீரங்கி குண்டுகளை ஒப்பிட்டால் மனிதன் பீரங்கிகுண்டுகளை தன் மார்பில் வாங்க மறுக்கிறான் உற்பத்தி மனிதனின் வீரத்தையும் மாற்றும்  உற்பத்தி நவீன வளர்ச்சி பெறும் போது மனிதனும் மாறுகிறான் இப்படி உற்பத்தியால் ஒரு நாடு உயர்வு பெறும் போது அந்த உற்பத்தியில் உயர்ந்த நாட்டின் வளர்ச்சியை எப்படி  அந்த நாட்டின் முதலாளித்துவத்தின் உயர்வாகக்  கருத முடியும்  அதற்குத் தொழிலாளி வர்க்கம் தான் கதாநாயகனாக இருக்க முடியும்…

ஆசிரியர் பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம் பற்றியும் விளக்குகிறார் காக்கை கருப்பாக இருக்கும் என்பது காக்கையைப் பார்த்த பிறகு முடிவு செய்வது ஆனால் கருத்து முதல் வாதம் என்பது கருப்பு என்ற   கருத்தை முதலில்  வைத்துக் கொண்டுக் கருப்பாக இருப்பது எல்லாம் காக்கை என்பது தவறு எனவே மார்க்சியம் பொருள் முதல் வாதத்தையே உடையது.

“பால் மூக்கில் ஏறி குழந்தை இறந்தது” பிறவிக் குருடன் பால் எப்படி இருக்கும் என்கிறான். கொக்கு போல இருக்கும் என்கிறான் ஒருவன் , கொக்கு எப்படி இருக்கும் என்று குருடன் கேட்கிறான். இன்னொருவன் கொக்கு இப்படி இருக்கும் என்கிறான். கொக்கு இப்படி இருக்கும் என்று கூறியவனின் கை தொட்டுப் பார்த்து இவ்வளவு பெரிய பால் ஏறினால் குழந்தை இறந்துதான் போகும் என்கிறான் குருடன்…..

கண், காது ,முக்கு,செவி போன்ற ஐம்புலன்கள் பொருள் இதைப் படைத்தது கடவுள்,கடவுள் தான் முதலில் வந்தார் இவற்றை உருவாக்கியது அவன்தான் என்கிறார்கள் கருத்து முதல் திகள். இந்த ஐம்புலன்களை வைத்து நம்மால் உணரமுடியும் .ஆனால் கடவுளை எதை வைத்து உணர முடியும். கருத்து பிறந்தது மூளையிலிருந்து மூளை பொருள் அப்போது பொருள் தான் முதலில்  தொழிலாளி இல்லை. முதலாளி இல்லை.

இந்த பொருள் முதல் வாதத்தை இயங்கவியல் ,வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்று பிரிக்கிறார் உற்பத்தி செய்யப்படும் பொருள் இயங்காமல் எதுவும் மாறாது அதே போல வரலாற்றில் பேசப்படும் அரசர்களின் வெற்றி எல்லாம் மக்களின் உறுதுணை இல்லாமல் நிகழ்ந்தது அல்ல என்கிறது…

முதலாளித்துவம் மூலதனம் என்பது முதலாளிகளுக்குத் தொழிலை பெருக்க உதவும் மூலதனம் பற்றியது இது தொழிலாளிகளின் உபரி உழைப்பிலிருந்து சுரண்டி மூலதனத்தை பெருக்குவது….

மார்க்சியமும் முற்போக்கு படைப்பாளிகளும்  சிலர் மார்க்சியம் பற்றித் தெரியாமலே முற்போக்காக எழுதுகிறார்கள் ஆனால் அவர்கள் தங்களை முற்போக்கு எழுத்தாளர் என்று கூற விரும்புவதில்லை அப்படி விரும்பாதவர்களானாலும் அவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் தான்…

மார்க்சியமும் அழகியலும் சிலர் மார்க்சியத்தில் அழகியலைத் தேடுகிறார்கள். ஒரு ஓவியன் பிச்சைக்காரியை வரையும் போது அந்த பிச்சைக்காரி கூட்டத்தில் அழகானவளைத் தேடி  வரைகிறான். இன்னொருவன் பிச்சைக்காரியை அழகாக வரைகிறான். மார்க்சியத்தை மார்க்சியமாகப் பார்க்கவேண்டும்.

ஆளும் வர்க்கத்தைப் பற்றி எழுதினால் அது அழகாகத் தெரியும்  தொழிலாளிகளைப் பற்றி எழுதும் போது அது அழகல்ல என்கிறார்கள்.

சமயமும் ,கடவுள் நம்பிக்கை முதலியன சிறைக்கதவைத் திறந்து வைத்து மக்களை அழைத்து உட்தாழ்பால் போட்டுக் கொள்ள வைக்கிறது.  சட்டத்தால் இயலாததைப் பண்பாடு என்ற பேரில் சமயம் செய்துவிடுகிறது.

மார்க்சியத்தை மார்க்ஸ் வழியாகப் பார்க்கும் போது, அதில் மார்க்ஸ் ஏங்கல்ஸ் விட்டுச் சென்றதைத் தூக்கிப் பிடித்து வெற்றி கண்ட லெனின் (விளதீமிர் இலியிச் உலியனோவ்)பற்றி ஆசிரியர் பேசுவது சிறப்பு. லெனின் இறப்பதற்கு முன்பு நாட்குறிப்பு எழுத நேரம் கேட்டதை மருத்துவர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். வேலை தான்  அவருக்கு வாழ்க்கை,சோம்பேறித்தனம் தான் மரணம் அவருக்கு என்று

மார்க்சியத்தை வைத்து வெற்றி கொண்ட ரஷ்யா லெனின் கூறியதை மறந்துவிட்டதால் தோற்கடிக்கப் படுகிறது “வெற்றி கொள்ளப்பட்ட முதலாளித்துவம் நூறு மடங்கு சக்தியோடு திரும்பி தாக்கக்கூடும் “ கூட்டத்தில் நேரம் எதிர்பார்த்துக் காத்திருந்த முதலாளித்துவத்தை மறந்துவிட்டது ஸ்டாலின் ஆட்சி….

எத்தனையோ நாடுகளில் மார்க்சியத்தைப் பற்றிப் பேசத் தலைவர்கள் இருந்தார்கள் இந்தியாவில் அப்படி அல்ல எனவே அனைவரின் கருத்தையும் முன்னிறுத்தியே இங்குச் செயல் பட வேண்டும்..

முதலாளித்துவம் தன் சவக்குழியைத் தானேத்  தோண்டிக் கொள்ளும்  சவக்குழிமேல் மார்க்சியம் சிகப்பு மலர்களாய் மலரும்...

 

தமிழ்காதலி தாரணி

நூல் தகவல்:
நூல் :மார்க்சியம் ஓர் எளிய அறிமுகம்

பிரிவு:  கட்டுரைத் தொகுப்பு

ஆசிரியர்: சிகரம் ச.செந்தில்நாதன்

வெளியான ஆண்டு: 2016

பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

விலை: 90


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *