கல்வியும் எதிர்மறை விளைவுகளும்:
நூற்றாண்டுகாலக் கல்வி வளர்ச்சியும் அறிவியல் முன்னேற்றமும் தொழில் மயமும் இயந்திரவியமும், பசுமைப் புரட்சியும் அனைத்து திட்டங்களும் எத்தகைய வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளன அதிரவைக்கும் உண்மையை நூல் ஓங்கி உரைக்கின்றது. தமிழ்வழிக் கல்வியும் தமிழ் இலக்கியப் பயிற்சியும் இல்லாத மெக்காலேயின் வரட்டுக் கல்வியின் ஈடு செய்ய இயலாத பேரிழப்பை மதிப்பிட இந்நூல் அருள் துணை செய்கின்றது.
எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத திக்கில் முன்னேற்றம் தன்னிறைவு என்ற மாதிரிகளின் துணை கொண்டு நடப்பதை வேரிலிருந்து நுனி வரை ஒவ்வொரு கூறையும் விளக்கி செல்கின்றது.பெயரில் செயற்கை ஆக்கியுள்ள அவலத்தை என்னென்பது! இயற்கையின் மடியில் வாழும் மலைகளையும் காடுகளையும் அழித்து அறியாமைதான் என்னே ! உயர்கல்வியின் எதிர்மறை விளைவுகள் தான் எத்தனை?எத்தனை?
மறை நீரும் விளக்கமும்:
மூன்றாம் உலகப்போர் தண்ணீரால் மூளும் என்ற எதிர்பார்ப்பைப் இருக்குமா என்ற அய்யப்பாட்டை நூல் எழுப்பி உள்ளது. பயன்பாட்டிலும் கண்ணுக்குத் தெரியாத நீர் மறைந்துள்ளது. இதுவே மறை நீர் எனப்படும். (ஜான் அந்தோணி ஆல்பர்ட் 2018) நான் சுவைத்துக் குடிக்கும் ஒரு குவளை காபியில் 140 லிட்டர் தண்ணீர், ஒரு முட்டையில் 190 லிட்டர் தண்ணீர் 11 டன் எடையுள்ள காரில் நாலு லட்சம் லிட்டர் 10 ட்ரில்லியன் தண்ணீர், ஒரு டன் கோதுமையில் 600 க்யூபிக் மீட்டர் தண்ணீர் மறை நீராக இருப்பதாக நூல் சொல்கிறது.
தண்ணீரும் குவிமையமும்: பெரும் தொழிலகங்கள் போக்குவரத்து ஊர்திகள் வழித்தடங்கள் உயரிய உணவகங்கள் ஓய்வு விடுதிகள் என கட்டுவதற்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. கதிரவன் நுழையமுடியாத அடர் காடுகளை மீண்டும் உருவாக்குவது அரிது காடுகள் அழிவால் மழை குறைகின்றது.
தொழிலகங்களும், ஊர்திகளும் வெளியிடும் புகையால்,காற்றும், வானமும் மாசடைகின்றன தொழிற்சாலை கழிவுகளால் ஆறுகள் முதலிய நீர் நிலைகள் கழிவு நீர் நிலையாகின்றன. உயிர்வளி எனும் பிராணவாயு குறைந்து கரியமிலவாயு பெருகுவதால் புவி வெப்பமாகிறது. சங்கிலித் தொடராய் தேடல் தொடர அத்தனையும் தண்ணீரில் குவிகின்றன என்பதை நூல் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கின்றது காடுகள் பற்றிய அறிவும் உணர்வும் இல்லாத அரசுகளாலும் மனிதர்களாலும் காடுகளை பாதுகாக்கவோ, பேனாவோ இயலாது எனும் உண்மையை நூல் அரண் செய்கிறது.
வள்ளுவரும் வெற்றாரவாரமும்:
பழந்தமிழ் இலக்கியங்கள் வள்ளுவம் சிலம்பு அறநூல்கள் இடைக்கால கல்வெட்டுகள் செப்பேடுகளில் காணக்கிடைக்கும் தமிழரின் நீர் பற்றிய அறிவையும் நீர் மேலாண்மைத் திறனையும் பழங்குடியினரின் காடுகளுடனான உறவையும் நூல் இன்னும் இல்லை உணர்த்தி நிற்கின்றது. மழைக்கான பல பெயர்கள் நீர்நிலைகளின்(48பெயர்கள்) பெயர்கள் வியப்பும் மகிழ்ச்சியும் தருபவை இவற்றையெல்லாம் எப்படி மறந்து வீணானோம்? நீரின்றி அமையாது உலகு எனும் வள்ளுவத்தை விழாக்களிலும் விருதுகளும் மேடைகளிலும் வெற்றுப் பேச்சுகளிலும் மட்டுமே கொண்டாடி வந்ததன் விளைவே இது! (தமிழ் இலக்கியங்களையும்).
சரியான புரிதலும் மாற்று சிந்தனையும்:
புவி வெப்பமயமாதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் அதன்மீதான உலகளாவிய எதிர்பார்ப்பு சற்றே நம்பிக்கை தருகின்றது. அணைகள் பற்றிய சரியான புரிதலை வலியுறுத்துகின்றது தனிமனிதரின் தண்ணீர் சிக்கன விழிப்புணர்வு சமுதாயப் பொறுப்பு அரசுகளின் மாற்றுச் சிந்தனை முதலானவை வலியுறுத்தப்படுகின்றன பழங்குடி/மலைவாழ் மக்களை பாதுகாத்தால் இயற்கை வளம் மேலும் என்பது உண்மை!
மழை நீரும் மீட்பும்:
இன்றைய சூழலில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்நூல் பாடநூலாக வைக்கப்பட வேண்டிய ஒன்று!
வைக்கப்படுமாயின் நூல் வழியே மேற்பரப்பு நீரும்,மறை நீரும் பாதுகாக்கப்படும் அத்துடன் ஏற்றுமதி பொருளியல் வளர்ச்சி என்ற பெயர்களில் மழைநீர் பொருட்களை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும் கட்டமைக்கப்பட்ட இயற்கை பற்றிய புரிதல் ஏற்படும் எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்பதில் பொதிந்துள்ள அறிவியல் நோக்கும் அழகியற் பார்வையும் புலப்படும். இன்னும் நிறையவே!
–
- முனைவர் நா.நளினிதேவி
தமிழ்ப் பேராசிரியர். ( பணி நிறைவு)
- தமிழறிஞர் முனைவர். நா.நளினிதேவி மறைநீர் நூலாசிரியருக்கு எழுதிய கடிதம்.
அன்பான லீலாவுக்கு,
தமிழினிய வாழ்த்தும், வணக்கமும்.
உங்களின் பணியும், நூலும் நாளைய உலகு குறித்த நம்பிக்கையைத் தருகின்றது. பெண்களின் பன்முகத் திறனுக்கு நீங்கள் ஒரு சான்றாக விளங்குவது மகிழ்ச்சி தருகின்றது.
பெண்களுக்கு வரையறுக்கப் பெற்ற, குடும்பத்தலைவி, வீட்டு வேலைகளில் முடங்கி விடாமல், அரசுப் பணியைத் தன்னலத்துடன் பயன்படுத்தமால் சமுதாயப் பொறுப்புடன் இயங்குதல். இது போல் ஒவ்வொரு பெண்ணும் செயல்பட்டால்….. செயல்பட வேண்டும் என்ற பேராசை துளிர்க்கின்றது.
உளமார்ந்த பாராட்டுகள் பல !
கருத்துரையை இணைத்துள்ளேன், நூலுக்கு பல மதிப்புரைகள், ஆய்வுரைகள் வந்திருப்பதால் சுருக்கமாகவே எழுதியுள்ளேன்.
நூல் மறக்கப்படாமல் நினைவில் தொடரட்டும். இது போன்று மேலும் ஆழமான நூல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
பல பொறியாளர்களுக்கு இத்தகைய சிந்தனை இல்லையென்பது வருத்தம் தருகிறது.
நன்றி !
அன்புடன்.
நா.நளினிதேவி.
நூல் : மறை நீர்
பிரிவு: கட்டுரைகள் | சூழலியல்
ஆசிரியர் : கோ.லீலா
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2019
விலை: ₹ 150