க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம் (கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்) வலங்கைமானில் ஜனவரி 31, 1912இல் பிறந்தவர். சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார்.

க. நா.சு. சிறந்த தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்தார். தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi – Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். மயன் என்னும் புனைபெயரில் புதுக்கவிதைகளையும் எழுதியுள்ளார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு.

1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. க.நா.சு. 1988 டிசம்பர் 18ல் காலமானார்.


க. நா. சுப்ரமண்யம் படைப்புக்கள்.

 

  • புதினங்கள்
  1. அசுரகணம் (1959)
  2. அவதூதர் (1988)
  3. அவரவர் பாடு (1963)
  4. ஆட்கொல்லி (1957)
  5. ஆயுள் தண்டனை
  6. ஏழுபேர் (1946)
  7. ஏழுமலை
  8. ஒரு நாள் (1946)
  9. கந்தர்வ லோகத்தில் கொலை
  10. கருகாத மொட்டு (1966)
  11. கோதை சிரித்தாள் (1986)
  12. கோபுர வாசல்
  13. சக்தி விலாசம்
  14. சத்யாகிரஹி
  15. சமூகச் சித்திரம் (1953)
  16. சர்மாவின் உயில் (1948)
  17. தந்தையும் மகளும்
  18. தாமஸ் வந்தார் (1988)
  19. நடுத்தெரு
  20. நளினி (1959)
  21. நான்கு நாவல்கள் (1955)
  22. பசி (1943)
  23. பட்டணத்து வாழ்வு (1961)
  24. பித்தப்பூ (1987)
  25. புழுதித் தேர்
  26. பெரிய மனிதன் (1959)
  27. பொய்த்தேவு (1946)
  28. மாதவி (1959)
  29. மூன்று நாவல்கள் (1985)
  30. வாழ்ந்தவர் கெட்டால் (1951)
  31. வாழ்வும் தாழ்வும்
அச்சில் வராதவை
  1. திருவாலங்காடு
  2. மால்தேடி
  3. வக்கீல் ஐயா
  4. ஜாதிமுத்து
  5. சாலிவாஹணன்
  6. சாத்தனூர்
  • சிறுகதை
  1. அழகி முதலிய கதைகள் (1944)
  2. ஆடரங்கு (1955)
  3. இரண்டு பெண்கள் (1965)
  4. க.நா.சு கதைகள் மி, மிமி, மிமிமி (1988)
  5. சாவித்திரி சிறுகதை
  6. சுந்தா பாட்டி சொன்னாள்
  7. தீ! தீ கதைகள்
  8. தெய்வ ஜனனம் (1943)
  9. நாயக்கர் தஞ்சை கதைகள்
  10. பதினேழு கதைகள்
  11. மணிக்கூண்டு (1961)
  12. மராட்டியர் தஞ்சை கதைகள்
  • கவிதை
  1. க.நா.சு கவிதைகள் (1986)
  2. புதுக் கவிதைகள் (1989)
  3. மயன் கவிதைகள் (1977)
  • நாடகம்
  1. ஊதாரி (1961)
  2. ஏழு நாடகங்கள் (1944)
  3. கலியாணி
  4. நல்லவர் (1957)
  5. பேரன்பு, கவிதைநாடகம்
  6. மஞ்சளும் நீலமும்
  7. வாழாவெட்டி
  • மொழிபெயர்ப்பு
  1. அன்பு வழி – ஸ்வீடிஷ் – பேர்லாகர் க்விஸட் (1956)
  2. ஆல்பர்ட் ஷ்வைட்ஸரின் சுயசரிதம் (1958)
  3. உலகின் சிறந்த நாவல்கள் (1959)
  4. எளிய வாழ்க்கை – ஹென்றி டேவிட் தேபரோ (1956)
  5. ஐரோப்பியச் சிறுகதைகள் (1987)
  6. குடியானவர்கள் – போலந்து
  7. தாசியும் தபசியும் – பிரெஞ்சு
  8. நல்ல நிலம் – கெரோல்
  9. நிலவளம் – நார்வேஜியன் – நட்ஹாம்சன்
  10. மதகுரு – போலந்து
  11. மிருகங்கள் பண்ணை – ஜேம்ஸ் ஆர்வெல் – (1956)
  12. விருந்தாளி – பிரெஞ்சு- ஆல்பெர் காம்யூ
  • விமர்சனக் கட்டுரை
  1. இந்திய இலக்கியம் (1984)
  2. இந்திய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் (2002)
  3. இலக்கிய வளர்ச்சி க.நா.சு பார்வையில் (1986)
  4. இலக்கிய விசாரம் (ஒரு சம்பாஷணை) (1959)
  5. இலக்கியச் சாதனையாளர்கள் (1985)
  6. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984)
  7. உலக இலக்கியம் (1989)
  8. உலகத்தின் சிறந்த நாவல்கள் (1960)
  9. கலை நுட்பங்கள் (1988)
  10. கவி ரவீந்திரநாத தாகுர் (1941)
  11. சிறந்த பத்து இந்திய நாவல்கள் (1985)
  12. தமிழ் இலக்கிய விமர்சகர்கள் (1979)
  13. படித்திருக்கிறீர்களா? (1957)
  14. புகழ்பெற்ற நாவல்கள் (1955) (இரண்டு தொகுதிகள்)
  15. புதுமையும் பித்தமும் (2006)
  16. மனித குல சிந்தனைகள் (1966)
  17. மனித சிந்தனை வளம் (1988)
  18. முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (1957)
  19. விமரிசனக் கலை (1959)
  • ஆங்கில நூல்
  1. Contemporary Indian Short Stories (Ed.) (1977)
  2. Contemporary Tamil Short Stories (1978)
  3. Generations (Novel) – Neela Padmanaban (1972)
  4. Movements for Literature
  5. Sons of the Sun (Novel) – Sa.Kandasamy (2007)
  6. The Anklet Story (1977)
  7. The Catholic Community in India (1970)
  8. Thiruvalluvar and His Thirukkural (1989)
  9. பாரதியின் காட்சி (1989)

நன்றி : https://www.chennailibrary.com 

 

க.நா.சு: ஓர் எழுத்தியக்கம் - பழ. அதியமான்
க.நா.சு.: தனிப்பெரும் இலக்கிய ஆகிருதி - சி.மோகன் கட்டுரை

 

One thought on “க. நா. சுப்ரமண்யம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *