“ஒரு ஆணுக்கும் ஆணுக்குமான தொடுதலும் தொடுதல் நிமித்தமான புரிதலும்”
என்பதாகத் தான் இந்தக் கதை நமக்குள் பதிவாகிறது.

நகப்பூச்சும் பொட்டும் தொட்டுப் பேசும் இயல்புமென மேலோட்டமாக எடுத்தாளப்பட்டு “சம்திங்க் ராங்” காக சித்தரிக்கப்படும் வைரமணி அண்ணனை இன்னும் கொஞ்சம் வலுவாகக் களமாடச் செய்திருக்கலாம் ஆசிரியர்.

அந்த “சம்திங்க் ராங்க்” தான் இந்த களத்தின் அடி வேராக இருக்கையில்..
ஒரு  முற்றுப்பெறாத போதாமையின்  புள்ளியில் வாசக மனதை நிறுத்தியிருப்பதாக உணர்கிறேன்.

இன்னும் பேசத்தக்கதொரு சிறப்பான களத்தைக் கையில் எடுத்துக் கொண்டதற்கு.. வாழ்த்துகள்.


இச்சிறுகதையை கலகம் இணையதளத்தில் வாசிக்க இணைப்புச் சுட்டி –>அரவிந்த் வடசேரியின் “வைரமணி”