இப்புத்தகம் கிடைக்க பெற்றதும் இது கட்டுரை புத்தகம் என்று தான் நினைத்து படிக்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சர்யம்!! முடிக்கையில் வால்பாறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன்.

வெளி வர மனசில்லாமல் மீண்டுமொரு முறை வால்பாறைக்குள்…. சாரி. சிப்ஸ் உதிர் காலத்துக்குள் என்னை நுழைத்துக் கொண்டேன்.

கிட்டதட்ட 40 கட்டுரைகள். ஒவ்வொரு வரியிலும் ரசனை மிகு எழுத்தாக்கம். தவமிருந்து வரம் பெற்ற எழுத்துக்கள்.

வழக்கமாக “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்றே ஏக்கத்தோடு கடந்த காலத்தை திரும்பிப்பார்போம்.
இல்லை. அப்படியெல்லாம் இல்லை. அது கடந்து விடவில்லை. இன்னொரு முறை கூட அதில் வாழலாம் என்று காலத்தை திருப்பிப் போட்டு நம்மையும் சேர்த்து அழைத்துச் சென்று, பால்ய கால நாட்களை- ஏறி விளையாடிய கொய்யா மரத்தை, கொஞ்சி மகிழ்ந்த ரோசி, சுருளி, போட்டியில் வென்ற களிப்பை, ஆடிய கில்லி, ஆக்கிய கூட்டாஞ்சோறு, கொண்டாடிய பண்டிகைகள், படித்த பள்ளி, கற்பித்த ஆசிரியர்கள், காதலித்த தேவதைகள் என அனைத்தையும் ஒரு புது நண்பனை பழைய நண்பர்களுக்கு அறிமுகபடுத்தும் உற்சாகத்தோடு நமக்கு அறிமுக படுத்தும் மகிழ்ச்சி அளப்பரியது.

வால்பாறைக்குள்… உருளிக்கள்ளுக்குள்… வாழ்ந்த மாதிரி ஒரு நினைவு. (முற்பிறவிகளை நம்பிக்கொள்கிறேன்)

ஒவ்வொரு முறை படிக்கும் போதும் தெரியும் காட்சிகள்… துல்லியமான அழகு.

Actualலா வால்பாறையை உதிர்த்து chips போட்டிருக்கிறார் கவிஜி. Nostalgic memoryகளில் பொறியும் நினைவு chipsகள் நம் கைகளில்… மொறுமொறுவென….
வேண்டுமென்போர் கொறிக்கலாம்…
வாய்க்கப்பெற்றோர் வாழ்ந்து சுவைக்கலாம்!!

வால்பாறை வாசிகள் “எங்கள் ஊர்” என காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம். வால்பாறையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் இன்னொரு முறை வாழ்ந்து களிக்கலாம்
என்னை போன்றோர் வால்பாறையில் வாழ்வதற்காகவே ஒவ்வொரு முறையும் படிக்க வேண்டியதாகிறது.

படிக்க படிக்க இனிப்பு வழியும் கட்டுரைகள்… அவை கட்டுரைகள் அல்ல. கடந்த கால காட்சிகள்!!
கடைசி கட்டுரை படிக்கும் போது முடிந்துவிட போகிறதே என்ற பதட்டம் இருந்தது. பேருந்து பயணத்தில் அதுக்குள்ள ஊர் வந்துருச்சா என கேட்கும் அப்பாவி மனநிலையில் தான் இருந்தேன்.

chips உதிர் காலம் இரண்டாம் பாகம் வருமா கவிஜி??
வால்பாறையில் வாழ்ந்து பார்க்க பேராசை. அவ்வளவுதான்.

நேசமுடன்

– வாசுகி தேவராஜ்

நூல் தகவல்:

நூல் : சிப்ஸ் உதிர் காலம் (The gateway of vaalpaarai)

பிரிவு:  கட்டுரைத் தொகுப்பு

ஆசிரியர் : கவிஜி

வெளியீடு : படைப்பு பதிப்பகம்

வெளியான ஆண்டு :   முதற்பதிப்பு  2020

விலை: ₹ 120