கவிதைகள் எழுதலாம், கதைகள் எழுதலாம், உலகின் இசங்களைப் புரிந்துகொண்டு, விளக்க உரைகளும் எழுதலாம்.

ஆனால் குழந்தைகளின் மனவுலகத்தைத் தொட்டுப் பார்க்கும் கதைகளை எழுதுவதற்குப் பெரும் புரிதல் வேண்டும்.

கடந்து வந்துவிட்ட குழந்தைப் பருவத்திற்குள் மீண்டும் பயணிக்க விரும்பும் குழந்தைத்தனமும், உற்சாகமும், வேகமும், தன்னியல்பும் கொண்ட படைப்பாளியால் மட்டுமே சாத்தியமது. மு.முருகேஷ்க்கும் சாத்தியப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கிய உலகில் பல பரிமாணங்களைத் தொட்ட அவர், புது வீச்சுடன் குழந்தைகளுக்காக கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.

’தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 16 கதைகளின் மூலம் குழந்தைகளுக்கு மிக அருகில் இருக்கும் அதிர்ஷ்டம் பெற்றிருக்கிறார்.


நூல் தகவல்:

நூல் : தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்

பிரிவு :  சிறுவர் கதைகள்

ஆசிரியர்: மு.முருகேஷ்

பதிப்பகம் :  அகநி வெளியீடு

வெளியான ஆண்டு :  2019

விலை :  ₹ 100

தொடர்புக்கு: 9842637637 

அமெசானில் நூலைப் பெற