அபுனைவுநூல் விமர்சனம்புதியவை

சூழலும் சாதியும்


சாதி என்ற இழிமுறையை பாதுகாக்கவும், காலத்திற்கு ஏற்றாற் போல புதுப்பித்துக் கொள்ளவும் ஆரிய பிராமணியம் எவ்வாறு சூழலை- விலங்குகளை-தாவரங்களை- நிறங்களை லாவகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பதை பல அறிஞர்களின் ஆய்வு முடிவுகள், தரவுகளோடு விளக்கிச் சொல்கிறார் ஆசிரியர் நக்கீரன்.

பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த பல வாழ்வியல் நடைமுறைகள், சமூக அமைப்புகள் ஒழிந்த போதும் “சாதி” மட்டும் ஒழியாமல் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு சூழலோடு  ஏற்படுத்தப்பட்ட பிணைப்பை வெகு எளிமையாக உதாரணங்களுடன் விளங்க வைக்கிறது புத்தகம்.

ஏன் இத்தனை ஆண்டுகளாக சாதி ஒழியவில்லை என்பதை புரிந்து கொள்வதற்கான வெகு சில புத்தகங்களில் இந்த புத்தகம் மிக முக்கியமான புத்தகம் என கருதுகிறேன்.

“ஒரு மரத்தின் இலைகள் எல்லாம் ஒன்றுபோலவே இருப்பதில்லை”

 –காந்தி 

“எல்லா இலைகளின் சாற்றையும் பிழிந்தால் அது ஒன்றுபோலவே இருக்கும்”

நாராயண குரு

(ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு குறித்து இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் இருந்து)  எனத் துவங்குவதில் இருந்து புத்தகத்தின் கடைசி பக்கம் வரை மிகவும் சுவாரசியமான செய்திகளை ஆய்வு ஆதாரங்களுடன் விளக்கிச் சொல்கிறார்.

எதுவெல்லாம் இந்த இந்திய மண்ணின் பூர்வக்குடிகளின் அடையாளமாக இருந்ததோ, அதையெல்லாம் இழிவு எனக் கூறி அந்த உளவியலை வழுவாக  அவர்களே நம்பும்படி சூழலில் உள்ள நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம், ஒலி,ஒளி,நிறம், திசைகள், பறவைகள், விலங்குகள் தாவரங்கள் என அனைத்தையும் பயன்படுத்தி சாதிய சமூகத்தை மிக நேர்த்தியாக கட்டமைத்த ஆரிய சூழ்ச்சியை ஆதாரங்களுடன் அருமையாக அம்பலப்படுத்துகிறார்.

இயற்கையின் நிறம் “கருப்பு” அது ஏன் தாழ்ந்த நிறமாக்கப்பட்டது, உயிர்களில் அனைத்தும் சமம் என்ற கோட்பாடு தகர்க்கப்பட்டது எப்படி, “தீட்டு” என்ற சமூக நடைமுறையை உறுதி செய்ய சாதியம்-பார்ப்பனியம் சூழலை எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பவற்றிற்கு வியத்தகு விளக்கம் சொல்கிறார் ஆசிரியர்.

அனைவரும் படிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகம்.  ஆசிரியர் நக்கீரன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

நூல் தகவல்:
நூல்: சூழலும் சாதியும்
பிரிவு:  கட்டுரைகள் / சூழலியல்
ஆசிரியர் :  நக்கீரன்
வெளியீடு: காடோடி பதிப்பகம்
வெளியான ஆண்டு:   மார்ச் 2021
விலை: ₹ 80 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *