Fictions- Reviewநூல் விமர்சனம்புனைவு

அப்பா பற்றிய பல்வேறு சித்திரங்கள்- சாட்டை- நாவல் விமர்சனம்


ப்பா பற்றிய பல்வேறு சித்திரங்களை பலர் படைப்புகளாக எழுதி இருக்கிறார்கள் .நானும் என் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு அப்பா என்று தான் பெயர் வைத்தேன். அந்த வகையில் தன் அப்பா சார்ந்த அனுபவங்களை ஒரு நாவலாக பாண்டிச்சேரி ராஜ்ஜா அவர்கள் இந்த சாட்டை மூலம் வெளியிட்டிருக்கிறார்

அப்பா என்பவர் கவிதையைப் போல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுப்பார் ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக பதிந்து போன முறை அவரை அவரை மனதை விட்டு அகற்ற முடியாது .மறக்கவும் முடியாது .ஒவ்வொரு மனிதனின் ஆணிவேர் அப்பா தான். நினைக்கத் அலைக்கழிக்க வைக்க.. ஒரு சிலருக்கு அப்பாதான் ஹீரோ .அப்படிப்பட்ட ஒரு ஹீரோவின் கதையை சொல்கிறது என்கிறது அட்டைப் படக் குறிப்பு.

ராஜாவும் ” என் காவியத்தலைவன் இடத்திலேயே இந்த நாவல் இருக்கிறது. என் அப்பாவைத் தவிர மற்ற அனைவரும் கதையை நகர்த்துவதற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள். குலமென்று சேர்க்கத்தான் காவியத்தலைவன் மறுஜன்மம் எடுக்க மாட்டார்களா என்ன மற்ற கதாபாத்திரங்களை நான் உப்பு புளி மிளகாய் என்று சொல்வதும் காரணமாகத்தான் .சூழலில் காணாமல்போனவர்கள் காவிய தலைவர்களாக மறு ஜென்மம் எடுக்க மாட்டார்களா என்ன? என்று கேட்கிறார் ராஜ்ஜா.

இந்த நாவலில் அப்படி அல்லாமல் பலரும் மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும் அப்பாவைப் பற்றிய ராஜ்ஜாவின் சித்திரங்கள் மனதை நெகிழ வைக்கும் தன்மை கொண்டவை .அப்பாவின் ஆங்கில மொழியை டைரி எழுதுவது என்கிற பழக்கம் பல அனுபவங்களை தந்திருக்கிறது. அப்பாவின் பழக்கவழக்கங்களை பார்த்து அதை சேர்ந்து ரசிக்க நான் எப்போது பெரியவனான வருது என்று ஏங்குகிற படி அப்பாவின் பல பழக்கங்கள் இருந்திருக்கின்றன. அதை ஆசிரியர் மிகவும் ரசித்து இருக்கிறார் .எதை செய்தாலும் ரசித்து செய்யுமாறு அவர் இருக்கிறார்.

வெள்ளைக்காரர்களின் கூட்டத்தில் அதிக சகவாசம் இருந்ததாலோ என்னவோ அப்பாவின் ரசனையே தனி . கலாரசிகன் பட்டம் கூட அப்பாவி கொடுக்கலாம் என்கிறார். ரப்பர் என்ற ஒரு பொருள் பற்றிய சித்திரம் நாவலில் ஓரிடத்தில் வருகிறது .அது சாதாரண ரப்பர். தான் ஆனால் ஒரு வாசனையைப் பரப்பும் இதுபோன்ற ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு கலாச்சார வாதிகள் மத்தியில் புழக்கத்தில் இருக்கும் பல பொருட்களும் இந்த நாவலில் உயிர்பெற்று நடமாடுகின்றன.சகுந்தலா, பாக்கியம் என்ற இரண்டு பெண்கள் இதில் முழுச் சித்திரங்களாக நடமாடுகிறார்கள் .ஆசிரியரின் மனைவியாக ஒருவரும் இன்னொரு துணைப்பெண்ணானவள் அப்பாவின் உத்வேகத்தையும் என்று அவர்கள் நாவல் முழுக்க வருகிறார்கள். அப்பாவிற்கு எது தப்பு என்று சுட்டிக்காட்டுவது முக்கிய வேலையாக இருக்கிறது அதே சமயம் தப்பு என்று வந்துவிட்டால் மன்னிப்பு கேட்பது இயல்பாகிறது. ஆனால் அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொள்வதும் அந்த வாழ்க்கை தொடங்கும் புள்ளிகள் இதெல்லாம் பலருக்கு மன்னிக்க முடியாத இருக்கிறது. அந்த பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்து போகிற துயரம் நடக்கிறது .அப்பாவின் கனவு உலகத்தில் பலர் நடமாடுகிறார்கள். அந்த நடமாட்டத்தை ராஜா தெளிவாகக் காட்டுகிறார் குடும்ப வாழ்க்கை உணவு முறை கலாச்சார பழக்க வழக்கங்கள் பாண்டிச்சேரி பின்புலத்தில் இருக்கிற சரித்திரக் கூறுகள் எல்லாம் கலந்து மிகவும் எளிமையான ஒரு நாவலாக ராஜ்ஜா தந்திருக்கிறார்.

அப்பா என்றாலே குரூரம் சாட்டை என்ற வடிவம் மனதில் வந்தால் கூட இந்த நாவலில் அப்பா பற்றிய பெருமை மட்டும்அப்படி இல்லை என்று எல்லா கோணங்களிலும் அவரைப் பார்க்கச் செய்கிறது ,இதை விருப்பு வெறுப்பின்றி ராஜ்ஜா அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார் இவ்வளவு எளிமையான ஒரு நாவலா என்று அவருடைய மொழி ஆளுமையும் இத்தகைய உரைநடையில் இருக்கிறது ஆங்கில மொழியில் அதிகம் எழுதும் ராஜ்ஜா அவர்கள் ஒரு தமிழ் நாவல் எழுதும்போது ஒரு ஆங்கில நாவலின்உடைய எளிமையுடன் அணுகி இருக்கிறார் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது.ஏனென்றால் தமிழ் மொழியில் இருந்து பல நூல்களை அவர் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் .அந்த வகையில் எளிமையும் வெளிப்பாடும் கொண்ட நூல்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட ஒரு எளிமையான நாவலாக இதைச் சொல்லலாம். இரு மொழி வல்லுனர்கள் பெரும்பாலும் இப்படி எளிமையான வெளிப்பாட்டு முறையை கொண்டு இருக்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்கும்போது விளங்குகிறது.  இன்னொரு உதாரணம் அசோகமித்திரன் அவர்கள்.அதற்கு காரணம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு படைப்பாக்கம் பெறுகின்ற போது அதன் எளிமையும் சுலபமான வெளிப்பாட்டுத் தன்மையும்தான் வாசகர்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கை .அதே நம்பிக்கையை தாய்மொழியான தமிழில் ஒரு நாவல் எழுதும்போது கூட கைக்கொண்டு ராஜா இந்த நாவல் எழுதி இருக்கிறார் அவரின் ஆங்கிலப்புலமையை ஒப்பிடுகையில் இந்த நாவலின் எளிமை மிகு சாதாரணமானதுதான்.ஆனால் அவருடைய முயற்சிகள் எல்லாம் எளிமையானவை என்ற அளவில் சில சிகரங்களைத் தொட்டு இருக்கிறார். அப்படித்தான் என்னுடைய சாயத்திரை நாவலை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு கொண்டு வந்த காலத்தில் ,25 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அது ஒரு சாதனையாக மாற்றியவர் காரணம் அந்த நாவலில் என் சிடுக்கு மொழியும். பின்நவீனத்துவச் சிதைவும் சிக்கலும் கலைந்து இருந்தாலும் ஆங்கிலத்தில் எளிமையான நாவலாக வெளிப்படுத்தி இருந்தார். எல்லாவகை படைப்புகளிலும் சாதாரணமாக ஊடுருவி எழுதியும் வியந்தும் அவற்றைப் பற்றி எழுதுவதும் என்ற ராஜ்ஜாவின் எழுத்து வாழ்க்கையில் பெரும் பங்களிப்பு என இருக்கிறது . இது இரண்டாம் பதிப்பு பெற்றிருக்கிற காரணத்தினாலேயே அந்த எளிமைக்கு கிடைத்த வெற்றி என்று கூட சொல்லலாம்.


  • சுப்ரபாரதி மணியன்
நூல் தகவல்:
நூல்: சாட்டை
பிரிவு : நாவல்
ஆசிரியர்: ராஜ்ஜா
வெளியீடு: சப்னா புக் ஹவுஸ்
வெளியான ஆண்டு  2020
பக்கங்கள்: 179
விலை : ₹ 130
தொடர்புக்கு : 94442 99656
கிண்டில் பதிப்பு :

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *