வந்தாரங்குடியான்
₹ 125.00
- Year: ஆகஸ்ட் -2020
- Page: 92
- Language: தமிழ்
- Category: நாவல்
- Publisher: Surrabi Publications
4 in stock
Description
என்னுடைய எல்லா படைப்புகளிலும் ஏதாவது ஒரு முக்கியமான, அதே நேரத்தில் சமூகத்தில் இன்றளவும் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினையை பேசிக்கொண்டிருக்கிறேன். இது உங்கள் காதுகளுக்கு எட்டாமல் போகலாம், உங்கள் கண்களுக்கு தெரியாமல் போகலாம். ஆனால் காலம் எவ்வளவு அற்புதமானது என்பது எனக்கு தெரியும், எப்படியேனும் இந்த படைப்பு உங்கள் கைகளில் வந்து சேரும். அப்போது இந்த பிரச்சினையை பற்றி யோசிக்க வைக்கும் அல்லது இதற்கான ஒரு நல்ல உரையாடல் நடக்க காரணமாக இருக்கும். ஒருவேளை இந்த நாவல் வாயிலாக ஏதாவது ஒரு ஊரில், இதற்கான விடியல் பிறக்கலாம். அதன் மூலமாக இந்த சமூகம் ஒரு சமத்துவ சமூகமாக மாற வழி வகுக்கலாம் என்பதை நான் நம்புகிறேன். மாறாதது என்று இங்கு எதுவும் இல்லை என்ற அறிவியலை நம்புபவன் நான். எந்த மாற்றமும் நடந்தே தீரும். ஆண்டுகள் ஆகலாம். ஆனால் மாற்றம் நிகழ்ந்தே தீரும், பரிணாம வளர்ச்சியால்தானே மனித இனம் தோன்றியது.
- பிறைமதி குப்புசாமி
Reviews
There are no reviews yet.