Description
ஒடுக்கி வைக்கப்பட்ட இளம் பெண்ணின் மன உணர்வுகளில் இருந்து பீறிட்டு எழும் தீராக் காதலையும், தீராக் காமத்தையும் படிமங்கள் அதிகமின்றி அழகிய சொற்களில் வெளிப்படுத்த முயல்பவை பிரதீபாவின் கவிதைகள். அந்தரங்க விசும்பல்களை கூட கனிவு கூடிய பெண்ணின் மனமொழியில் சுருதி, லயம் இயல்பாக மீட்டி வந்திருப்பது இவர் கவிதைகளின் பலம்.
நவீன கால பெண்களின் மனத்தடையைப் போக்கி இயல்பான காதலையும், காமத்தையும் கசிந்துருகச் செய்யும் இந்தக் கவிதைகள் மூலம் முக்கிய புதுயுக கவிஞராக தனது முதல் நகர்வை தொடங்கியிருக்கும் பிரதீபாவிடம் இருந்து இன்னும் பெரிய மாயத்தை நிகழ்த்தும் கரங்கள் ஒளிந்திருப்பதை அறிய முடிகிறது.
– விஜய் மகேந்திரன்

Reviews
There are no reviews yet.