சாண்ட்விச்: புணர்தலின் ஊடல் இனிது
₹ 117.00
- Year: 2022
- Pages: 154
- Language: தமிழ்
- Category: நாவல்
- ISBN : 9788195580101
- Publisher: வர டீ பதிப்பகம்
10 in stock
Description
பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாலியல் கல்வியை கொடுக்கத் தவறினால், விடலைப் பருவத்து குழந்தைகள் அதை கண்டிப்பாக தவறாகத்தான் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது இந்த நாவல்.
விடலைப் பருவத்தின் ஆர்வக்கோளாறுகள் பல தவறான கோணத்திலேயே பாலியலை சிந்திக்க வைக்கிறது என்பதை மூன்று விடலைப்பருவ நண்பர்களின் சேட்டைகளை வைத்து விவரித்திருப்பது அருமை. அவர்களுக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகளில், எனக்கு பெர்சனாலாக ஒவ்வாத வார்த்தைகள் நிறைய இருந்தாலும், அப்படித்தான் பேசப்படுகின்றன என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு தான் கடக்க வேண்டியிருக்கிறது.
தவறான புரிதல்களால், தவறான கற்பனைகள் கொண்டு பிற்காலத்தில் காதலியை அணுகும்போது அத்தனை கற்பனைகளும் உடைந்து போகுமிடம், உண்மையை உணரும் இடங்கள் அருமை. ஆணுக்காவது தவறான புரிதலாவது இருக்கிறது. பெண்ணுக்கு அதுகூட இல்லை என்பதை அந்தக் காதலி மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
பிரச்னைகளை மட்டும் முன்வைக்காமல் புரிதலையும், தெளிவையும் முன்வைக்கிறது இந்த நாவல் என்பதில் எனக்கு மிகவும் பிடித்தமாக இருக்கிறது இந்தப் புத்தகம். இருவரும் ஆரம்பத்தில் குழம்பித் தவித்தாலும், விடா முயற்சியாக, அலுப்பு சலிப்பு இல்லாமல் பல வழிகளை கையாண்டு ஒரு வழியாக இருவரும் சேர்ந்து எப்படி கலவியை அனுபவிக்கலாம் என்று கற்றுக்கொள்வதிலாகட்டும், திருமணத்திற்கு பிறகும் இன்பமான கலவி மட்டுமே பிரதானமாக அவனுக்கு இருப்பதும், மனைவி கர்பமாக இருக்கும் வேளையில் அவளின் மற்ற உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் அவள் காயப்படுவதும், ஒரு கட்டத்தில் அவள் உணர்வுகளை முழுவதுமாக புரிந்து தெளிந்து, அன்பும் காதலும் புரிதலும் எத்தனை முக்கியம் என்று உணர்வதிலாகட்டும், கண்டிப்பாக படிப்பவர்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும்.
கதை முடிவு பெறும் வேளையில் இதெல்லாம் புரிந்து படிப்பவர்களுக்கு கூட ஒரு நிறைவைத் தருகிறது.
ஒரு ஆணின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட ஒரு கதையாக இருந்தாலும், இது பெண்களுக்கும் ஆண்களின் உலகை புரியவைக்கும்.
- விமர்சனம்
எழுத்தாளர் லதா
(கழிவறை இருக்கை – நூலாசிரியர்)
Reviews
There are no reviews yet.