ஜனவரி 2022- இல் சஹானா இணைய இதழில் பிரியா எழுதிய சிறுகதை ”ஆலிவ் குட்டி” வெளியானது. இது இவரின் முதல் சிறுகதை. இச்சிறுகதை குறித்து அன்பு மணிவேலின் விமர்சனம் இது. 


சை ஆசையாகச் செல்லப் பிராணிகளை வளர்ப்பதும் எதிர்பாரா விதமாக அதைப் பறிகொடுத்தலில் சந்திக்கும் வேதனைகளையும் பதிவு செய்திருக்கிறது இந்தக் கதை.

நாய்க் குட்டி வளர்க்க வேண்டுமென எந்தக் குழந்தைக்குத் தான் ஆசையிருக்காது. ஆனால் அப்படி வளர்ப்பதெல்லாம் கூட பெரிய விசயமில்லை. ஏதோவொரு சூழலில் அதைப் பறிகொடுப்பதென்பது அதை வளர்த்து வந்த உள்ளத்துக்குக் காலத்துக்குமான வலி அது.

அதன்பிறகு நாய் வளர்க்க யோசித்தாலே முன்பு சந்தித்த அந்த இழப்பு தான் முன் வந்து மிரட்டும். அப்படித்தான் ஆசையாக ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்து அதற்கு “ஆலிவ்” எனப் பெயர் சூட்டி அத்தனை அன்போடு வளர்த்து வந்தும் மிகக் குறுகிய காலத்திலேயே “பார்வோ வைரஸ்” என்ற நோய்க்கு அதைப் பறிகொடுக்கிறது ஒரு குடும்பம்.

அந்த இழப்புக்குப் பின் அந்த நோயைப் பற்றித் தெரிய வருகையில்,அந்த இழப்பின் மீதான வலி இன்னும் வலுக்கிறது.

தன் தாயிடம் 90 நாட்களுக்குப் பாலருந்தியதும் நோய்த் தடுப்பூசி போடப்பட்டதுமான குட்டிகளையே வளர்க்கப் பரிந்துரைக்கிறது இந்தக் கதை.

அத்தனை ஆசைபட்டு வளர்க்கும் ஒரு செல்லப் பிராணியின் திடீர் இழப்பை.. இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம். விழிப்புணர்வுப் பதிவின் ஒரு முயற்சியாக இந்தக் கதை கையாளப்பட்டிருக்கிறது.

இனி .. இந்த விழிப்புணர்வைக் கையாள்கையில் நமது செல்லப் பிராணிகளை இது போன்றதான நோய்க்குப் பலி கொடுக்கும் இழப்பிலிருந்து ஓரளவேனும் மீளலாம் நாம்.

 

இச்சிறுகதையை சஹானா இணையதளத்தில் வாசிக்க இணைப்புச் சுட்டி –> பிரியாவின் ”ஆலிவ் குட்டி”