மொழியின் வழமைப் புள்ளியை போன்றதொரு பொருளாய் கவிதை தேங்கி விடுமோவென்கிற
ஆதங்கங்கள் மேலோங்கி கொண்டிருக்கும் காலத்தின் சோர்வை போக்குகிறது மின்ஹாவின் இக்கவிதைத் தொகுப்பு.
வகைப்படுத்தவியலாத மவுனங்களை மனச்சலனமேற்படுத்தக் கூடிய சிறுபெருக்குகளைக் கொண்டு
உந்தித் தள்ளும் நதியின் மொழியை இயல்பாய், புனைவாய் கொண்டிருக்கின்றன. உறவு விலக்கப்பட்ட, தான் உறவிலிருந்த இயற்கையின் படிமங்களை குறியீடுகளாய் நமது விழிப்படலங்களின் காட்சியாக்கி உள்ளுணர்வை வெளிப்படுத்தும் மின்ஹாவிடம் தொன்மப் பெண்களின் பெரும் மூச்சும் பின் நவீன மனவெளியும் சாரையும் நல்லபாம்புமாய் இழைந்து கொண்டிருக்கின்றன.

நீலகண்டன்

கருப்பு பிரதிகள்


நூல் தகவல்:
நூல் : நாங்கூழ்
பிரிவு: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : மின்ஹா
பதிப்பகம் : கருப்புப் பிரதிகள்
வெளியான ஆண்டு : 2021
விலை: ₹ 70