நூல் விமர்சனம்புனைவு

மரக்கறி

2016 ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசினை பெற்ற நாவல் சமகால கவிஞர் சமயவேல் கருப்புசாமி அவர்களின் இரண்டு மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்புகளை வாசித்தவர்கள் இந்த அவரது மொழிபெயர்ப்பில் வந்துள்ள நாவலை மிகுந்த எதிர்பார்ப்புடன் வாசிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எளிமையும் அழகும் நிறைந்தவை இவரது கவிதைகள். இவரது கவிதை மொழியின் ஈர்ப்பு அதன் இயற்கையோடு இயைந்து செழுமையால் விளைவது.

இந்த புத்தகத்தில் கவிஞர் சமயவேல் கருப்புசாமி எனக்கு அளித்த பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.

இயாங்-ஹை என்னும் மர்மம் இயாங்-ஹை கதாபாத்திரம் காலம் காலமாக உலகமெங்கும் உள்ள பெண்களின் மனதின் அடியாழத்தில் மூடி மறைக்கப்பட்டு, ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் பொங்கி எழுவதற்காக கொப்பளித்துக் கொண்டிருக்கும் சுதந்திர வேட்கையின் குறியீடு.

மேலோட்டமாக இக்கதையை வாசிப்பவர்களுக்கு இயாங் ஹை மனப்பிறழ்வு கொண்ட ஒரு பெண்ணாகவே தெரிவாள்.

இயாங் ஹை ஏன் பிடிவாதம் மிக்க பித்துப் பிடித்த பெண்ணாக இருக்கிறாள் என்ற கேள்வி வாசக மனதில் நாவலின் இறுதி வரை தொடர்ந்து வரும்.

குடும்பம், கணவன், சமுதாயம் இவைகளுக்கு எதிராக அவள் தொடுக்கும் போரே புலால் உணவை உண்ணவும் சமைக்கவும் மறுத்தல், பெண் என்பவள் ஒரு கவர்ச்சிப் பதுமையல்ல என்று உள்ளாடைகளை அணிய மறுத்தல், பலரும் பார்க்கும் வண்ணம் மருத்துவமனைத் தோட்ட நீரூற்றுக்கு அருகில் மேலாடையைக் கலைத்துவிட்டு அமர்ந்திருத்தல், எந்த மனக்கிலேசமும் இல்லாமல் அக்காவின் கணவர் கேட்டவுடன் தன்னை நிர்வாணமாக ஆக்கிக் கொள்வது, தன் மீது அழகிய பல வண்ண மலர்களை வரைய அனுமதித்தல், அந்நிய ஆடவன் ஒருவனுடன் இணைந்து நிர்வாண மாடலாக இயங்குதல், அக்காவின் கணவன் அத்துமீறி அவளுடன் காம இச்சையுடன் அணுகும் பொழுது கூட பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் இருத்தல். இவையெல்லாம் இவளது சுதந்திர வேட்கையை தனித்து பிரகடனப்படுத்தும் கூறுகள்.

தன்னை அனைவருக்கும் மகிழ்ச்சி தரும், பயன்படும் ஒரு மரமாக பாவித்து கொள்கிறாள். கிளைத்து வேர்விட்டு, பூக்களாக பூப்பேன் என்று அவள் திரும்பத் திரும்ப சொல்லும் பொழுது பெண் மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் பிரபஞ்ச நேசம் வெளிப்படுகிறது.

பிரபஞ்சத்தின் ஒரு கூறாக தன்னை பாவித்துக்கொள்வதும் தன் அடையாளம் இது என்று பிரகடனப் படுத்தும் அவளது ஆவேசமும் வாசக மனதில் திகைப்பை ஏற்படுத்துகிறது.

இயாங்-ஹை இச்சமூகத்திற்கு எதிராக எழுப்பும் குரல் வலுத்து ஒலிக்கிறது.

தான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் உரிமையற்றவள் என்ற அச்சமற்ற அவளது அறிவிப்பு வாசக மனதில் ஆணி அறைந்தது போலப் பதிகிறது.

வாசிக்கும் பொழுது காதாநாயகி குறித்து இப்படி ஒரு பெண்ணா என்று பல வகையில் அதிருப்தியும் மனக்கிலேசமும் அடைந்தாலும் இயாங்-ஹைக்காக கண்ணீர் சிந்தாமல் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாது என்பதுதான் இந்த நாவலின் நெகிழ்வான சிறப்பு.

 


நூல் தகவல்:
நூல் : மரக்கறி
பிரிவு: மொழிபெயர்ப்பு நாவல்
ஆசிரியர் : ஹான் காங்
மொழிபெயர்ப்பாளர்: சமயவேல்
வெளியீடு – தமிழ்வெளி
வெளியான ஆண்டு : 2020
விலை: ₹ 220
தொடர்புக்கு : 90940 05600

 

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *