திரைப்படத்திற்குரிய திருப்பம் விறுவிறுப்பென அறுபது ஆண்டுகால வாழ்க்கைக் குறிப்பாக விரியும் நாவலுக்கு வன்மம், காதல், இனப்பற்று, நட்பு, பழிதீர்த்தல் என மனிதர்களின் எண்ணற்ற உணர்வுகளே களமாகின்றன.

நேரியல் தன்மை அல்லாது விவரிக்கப்படும் அத்தியாயங்களில் தோன்றும் பல்வேறு கேள்விகளுக்கும், ஏராளமான கதாப்பாத்திரங்களின் அறிமுகங்களுக்கும் பதில் சொல்லும் கதை சொல்லல் முறை வாசிப்பின் பரபரப்பை அதிகரிக்கக் கூடியவை. நதிகள் சங்கமமாகும் கடலைப்போன்று அத்தனை மாந்தர்களின் சூனிய  வாழ்விற்கும் மங்கம்மாள் விளக்கின் தலைகீழ்ச்சுடரே அர்த்தம் கற்பிக்கின்றது.

வேறுபட்ட நிலப்பரப்புடைய தென்மக்களின் வட்டார மொழி வழக்கு, வசைச்சொற்கள், காட்சிகளை விவரிக்க பயன்படுத்தப்பட்ட கவித்துவமான உவமானங்கள், உயிரினங்கள், நெய்தல் நில சங்கத்தமிழ்பாக்கள் கதைபோக்கில் அசாதாரணமாக கையாண்டிருப்பது பிரமிப்பை ஏற்படத்தக்கூடியவை. ‘அடுத்தாரைக்காத்தார்’ என்று பயன்படுத்தப்படும் பரதவப் பெயர்க்காரணம்,  தேவர் சமூகமக்களை போத்தி என்றழைக்கக்கூடிய இணக்கம், சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தும் வலைகள் என வேறுபட்ட தரவுகள் பிரதியின் நிலைத்தன்மைக்குச் சான்று.


அபிநயா ஸ்ரீகாந்த்

நூல் தகவல்:
நூல் : மன்னார் பொழுதுகள்
பிரிவு : நாவல்
ஆசிரியர் : வேல்முருகன் இளங்கோ
வெளியீடு: ஜீவா படைப்பகம்
வெளியான ஆண்டு : 2020
பக்கங்கள் :  –
விலை :

₹ 300

 

இந்நூல் குறித்த மேலும் சில பதிவுகள்: