அபுனைவுநூல் விமர்சனம்புதியவைமொழிபெயர்ப்பு

இருளில் ததும்பும் பேரொளி


ருளில் ததும்பும் பேரொளி இந்த புத்தகத் திருவிழாவில் வெளியாகியுள்ள நல்ல சினிமா புத்தகம், திரைப்பட ஆர்வர்கள்,திரைப்பட மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

ஹாலிவுட் சினிமா , தென்அமெரிக்க சினிமா,ஆசிய சினிமா, ஐரோப்பிய சினிமாவில் இயங்கி ஆஸ்கர் விருதுகள் வென்ற  பத்து தலைசிறந்த இயக்குனர்களைப் பற்றிய அற்புதமான தொகுப்பு இது,

அத்தனை சொற்சிக்கனமான ஆனால் தாக்கம் ஏற்படுத்தும் அறிமுகங்கள் இவை, அவர்களின் படைப்புகளை ஒரு தமிழ்சினிமா கதாசிரியர் மற்றும் இயக்குனர் பார்வையில் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, இந்த 88 பக்கங்கள் அந்த auteur களின் படைப்புகளை  வாசிப்பவர்களிடத்தில் கடத்தும் என்பது திண்ணம்.

எந்த ஒரு இலக்கியம் மற்றும் வாசிப்பு என்பது மிகுந்த பிரயத்தனத்தைக் கோருவது,அவர்களுக்கு இப்படி நல்ல உலகசினிமா இயக்குனரின் படைப்புகளை  straight to the core அறிமுகம் செய்வது பயனளிக்கும்,தொடர் வாசிப்பிற்கு பாலமாயிருக்கும்.

உலகசினிமாவில் தரமான இயக்குனர்கள் வெறும் பத்து பேர்தானா? எனக்கேட்கலாம், கண்டிப்பாக கிடையாது, நூற்றுக்கும் மேற்பட்ட அருமையான இயக்குனர்கள் உண்டு, இது பத்து உலகசினிமா இயக்குனர்கள் பற்றிய திறவு கோல், நூலாசிரியரும்  நண்பருமான ஜெகநாதன் இன்னும் மென்மேலும் உலக சினிமா இயக்குனர் ஜாம்பவான்களை அறிமுகம் செய்வார், அதற்கு இது முதற்படி எனக் கொள்க.

 

அவரின் இந்த முதல் பத்து தலைசிறந்த இயக்குனர்களின்  தேர்வுகள் அற்புதமானவை.

அமெரிக்க உலக சினிமாவின் significant contemporary இயக்குனரான க்ரிஸ்டஃபர் நோலன் பற்றிய அறிமுகம்.

தென் கொரிய உலக சினிமாவில் என்றும்  தவிர்க்கமுடியாத  இயக்குனரான கிம்-கி-டுக்.அவருக்கு எழுதப்பட்ட நல்ல இதய அஞ்சலியாக இக்கட்டுரை இருக்கும்.

ஃப்ரெஞ்சு new wave  உலக சினிமாவின் மிக முக்கியமான படைப்புகளைத் தந்த  இயக்குனரான Claude chabrol பற்றிய அறிமுகம்.

மெக்ஸிக்க உலக சினிமாவின் தரத்தை உலக அரங்கில் உயர்த்தி , ஹாலிவுட் ஜாம்பவான் இயக்குனர்களை புருவம் உயர்த்த வைத்த ,காலத்தால அழியாப் படைப்புகளைத் தந்த  இயக்குனரான  Alejandro González Iñárritu பற்றிய அறிமுகம்.

ஸ்பானிய உலகசினிமாவின் தலையாய இயக்குனர் , இடைவெளியின்றி இயங்கும் இயக்குனர் Pedro Almodóvar பற்றிய அறிமுகம்.

மெக்ஸிக்கோவில் பிறந்து ஹாலிவுட் சினிமாவில் கோலோச்சும் இயக்குனர்  ஜாம்பவானான Guillermo del Toro Gómez பற்றிய அறிமுகஅறிமுகம்.

ஹாலிவுட் off beat phycological thriller திரைப்படங்களில் தவிர்க்க முடியாத ஆளுமை இயக்குனரான Darren Aronofsky பற்றிய அறிமுகம்.

ஹாலிவுட் non linear  crime thriller திரைப்படங்களில் மகத்தான, தனித்துவமான  பெயரெடுத்தவரும் ,off beat படங்களுக்கும்  ஆகச்சிறந்த வணிகச் சந்தையை உருவாக்கிய  இயக்குனரான  Quentin Tarantino பற்றிய அறிமுகம்.

ஹாலிவுட் gangster  சினிமாவில்  நன்கு அறியப்பட்டவரும்   மிகச்சிறந்த சர்ச்சைக்குரிய படைப்புகளை தந்த  இயக்குனரான  oliver stone  பற்றிய அறிமுகம்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சினிமாவில ஆறு தலைமுறைகளாக தனித்துவமாக  இயங்கி முத்திரை படைப்புகளைத் தந்தவர், உலக அரங்கில்  நல்ல சினிமா மீதான விவாதங்களை தோற்றுவித்த மூத்த இயக்குனரான Woody Allen ன் அறிமுகத்தோடு நிறைவு பெறுகிறது இந்நூல்.

ஒரு திரைக்கதை ஆசிரியர் பார்வையில் இந்த மகத்தான ஆளுமைகளை வியந்து நோக்கி எழுதிய கட்டுரைகள் மிகவும் நன்றாக அமைந்துள்ளன.

இந்த முக்கியமான உலக சினிமா நூலை சிறந்த முறையில் எழுதிய நூலாசிரியர்  ஜெகநாத் நடராஜன் , மற்றும் இந்நூலை அழகாகவும் ,தரமாவும் பதிப்பித்து ₹ 100 க்கு  வாங்கத் தரும் புலம் பதிப்பகத்தாருக்கு நன்றியுடன் வாழ்த்துக்களும்.

கீதப்ப்ரியன்

நூல் தகவல்:

நூல் : இருளில் ததும்பும் பேரொளி

பிரிவு:  நேர்காணல்கள் | மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பாளர் : ஜெகநாத் நடராஜன்

வெளியீடு : புலம் வெளியீடு

வெளியான ஆண்டு :  2021

விலை: ₹ 100

எழுதியவர்:


Advertisement

தீபிகா நடராஜனின் “ புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்” கவிதைத் தொகுப்பு.

சிந்தன் புக்ஸ் வெளியீடு | விலை : ₹ 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *