லகச் செய்திகளைச் சுவாரசியமான மொழி நடையில் சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர் ப.சிவனடி. கண்டிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் , நூலகங்களில் இடம் பெற வேண்டிய புத்தகம் இது.

இந்தப் புத்தகம் பத்துப் பத்து ஆண்டுகளாக சரித்திரத்தை பிரித்து காலத்தில் முன்னும் பின்னும் சென்று

உலக வரலாற்றை முழுமையாகக் காட்டும் அறிய நூல் வரிசையில் ஒன்று.தைர்யமாக,தெளிவாக எழுதப் பட்ட உரைநடை.

தமிழில் வெளியாகும் பெரும்பான்மை வரலாற்று நூல்கள் படிக்க அலுப்பூட்டும் நடையில் எழுதப்படுகின்றன. அத்தோடு மரபான வரலாற்றுத் தகவல்களைத் தாண்டி அதில் வேறு எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காலத்தைப் பிரித்து காட்டும் முறையும் மிகப் பழமையானது.

வரலாற்றை மீள்பார்வை செய்துவரும் சமகாலச் சூழலில் நவீன பிரக்ஞையுடன் கூட மறுவாசிப்பு நூல்களின் தேவை அவசியமாக உள்ளது. அந்த வகையில் டி.டி.கோசம்பி, ரொமிலா தாபர், மற்றும் பணிக்கரின் இந்திய வரலாற்று மீள்வாசிப்புகள் முக்கியமானவை.

இவ்வகையில் ப. சிவனடி எழுதி பதிநான்கு தொகுதிகளாக 1987 முதல் 1999 வரை வெளியாகி உள்ள இந்திய சரித்திரக் களஞ்சியம் மிக முக்கியமான தமிழ் நூலாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் ஒவ்வொரு பத்தாண்டுகாலத்தையும் தனியே எடுத்துக் கொண்டு அந்த காலகட்டத்தில் உலகம் எங்கும் பல்துறைகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் இவற்றோடு இந்திய சரித்திரத்தை இணைந்து உருவாக்கபட்டுள்ள இந்த நூல் சமகால வரலாற்று புத்தகங்களில் முக்கியமானதும் தனித்துவமானதுமாகும். இது போன்ற வரலாற்று பகுப்பு கொண்ட தமிழ் நூல் வேறில்லை.

நன்றி : எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன்

நூல் தகவல்:

நூல் : இந்திய சரித்திரக் களஞ்சியம்

பிரிவு :  வரலாறு

ஆசிரியர்: ப.சிவனடி

பதிப்பகம் :  அகநி வெளியீடு

வெளியான ஆண்டு :  2014

விலை : எட்டு தொகுதிகள்  ₹  5,000