பூச்சிகள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்களுக்கு ஈத்துக்கவுல் பொது. ஈத்துக்கு அவச்சொல்லாக ஈமமும், முடிவுக்கு எதிராக ஜனனமிருக்கும் இவ்வாழ்வின் இடைவெளி முழுக்க உதிரக்கோழையுடன் துள்ளும் இமைகள் திறவா உயிரியாக தட்டுத்தடுமாறப் பேராசைப்படுகிறேன். ஈத்துவுடலின் பிசுபிசுப்பைத் தாய்நாவுகள் துடைக்க துடைக்க பூமிக்கதைகளை அறியும் அரளியாகிறேன் நான்.

முத்துராசா குமார்

 

நூல் தகவல்:

நூல் : ஈத்து

வகை : சிறுகதைத் தொகுப்பு

ஆசிரியர் : முத்துராசா குமார்

வெளியீடு : சால்ட் & தன்னறம்

வெளியான ஆண்டு: டிசம்பர் 2021

பக்கங்கள் : 122

விலை:  ₹ 160

நூலைப் பெற:  தமிழ்வெளி – +91 9094005600