கல்கத்தா எனக்கு என்றென்றைக்குமான ஆத்மார்த்தமான பிணைப்புடைய நகரமாகமாறியிருக்கிறது. இலங்கை திரும்பிய பின்னரும்  மனதளவிலும், உடலளவிலும் கல்கத்தாவைவிட்டுப் பிரிந்துவிட்டதாக நினைக்கவில்லை. என்னால் ஒருபோது அப்படி நினைக்க முடியாது. அந்தரங்கமான சுதந்திரம் ஒன்று எனக்கு இங்கு இருந்தது. இந்த நகரத்தில் தங்கிவிடுவதைப் பற்றி ஒருபோதும் நான் யோசிக்கவில்லை. ஆனால் மனதளவிலும் இந்த நகரத்தைவிட்டு மீளவே முடியாது என்பதை உணர்ந்திருந்தேன்.

-ம.நர்மி

நூலாசிரியர் குறித்து : 

நர்மி என்ற பெயரில் எழுதி வரும் நர்மியா 1991 ஆம் வருடம் மதுரையில் பிறந்தவர். தற்போது கல்கத்தா ஜதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் தனது இரண்டாவது முதுகலை பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

 

நூல் தகவல்:
நூல் : கல்கத்தா நாட்கள்
பிரிவு : பயணக்கட்டுரை | நாட்குறிப்பு
ஆசிரியர் ம.நர்மி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு :  டிசம்பர் 2019
பக்கங்கள் 72
விலை : 70