பூமியின் வயது சுமார் 450 கோடி வருடங்கள் அப்படிப்பார்த்தால் மனிதர்களாகிய நாம் நேற்று முளைத்த காளான்கள் போல், பொடிப்பொடியாக துகள் துகளாக நிலையில்லாமல் அகண்ட வெளியில் சுழன்று கொண்டிருந்த மாபெரும் தூசி மண்டலம்தான் ஒருங்கிணைந்து பூமியாக மாறியது என்பது வியப்பாக உள்ளதல்லவா. உண்மைதான்.

கோடான கோடி ஆண்டுகளாக சுழன்று கொண்டிருந்த தூசி, வாயு, உலோகத் துகள்கள் எல்லாம் மெல்ல மெல்ல உருண்டையாக்கி, அந்த உருண்டைக்கு நடுவில் கிளர்ந்தெழுந்த புவியீர்ப்பு சக்தியின் காரணமாக இரும்பு போன்ற கனமான தாதுப் பொருட்கள் மையப் பகுதியை நோக்கி இறங்கி கெட்டிப்பட வெப்பத்தில் கொந்தளிக்கும் ஒரு சூப் உருவானது. வெப்பநிலை 2000 டிகிரி சென்டிகிரேட் நெருப்புக் கோளம் என்றே சொல்லலாம். அது மெல்ல மெல்ல குளிர் தன்மையாக இறுக ஆரம்பித்தது, பின்னர் மலைகளும் சமவெளிகளும் ஏற்பட்டன.

ஆசிரியர் மதன் இந்தப் புத்தகத்தில் மிகவும் பயன்படக்கூடிய பல தகவல்களை எங்களுக்கு அள்ளி அள்ளித் தந்திருக்கிறார். பூமித்தாய் என்ற போதும் யாருக்கு பூமி தாயாக இருக்கிறாள்.? என்று சிந்தித்தபோது அதற்குரிய விடைகளை இங்கு வாசித்து முடிந்தபோது காணக்கூடியதாக இருக்கின்றது. இதிலே மதன் தரும் தகவல்கள் எல்லாமே கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சம்பவங்களை ஆதாரங்களோடு நிரூபிக்கிறார். அத்துடன் அவரது சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் வாசித்துக் கொண்டு போகும் பொழுது பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. சிலவற்றில் என்னை அறியாமலேயே சிரிப்பும் வந்துவிட்டது.

நான் முதலில் யோசித்தேன். ஆசிரியர் மதன் பூமியைப் பற்றி தான் சொல்லப் போகிறார் என்று, ஆனால் பல கிரகங்கள் பற்றி, இதிலேயே வித்தியாசமான பல தகவல்களில் ஒன்று, நம்ப முடியாமல் இருக்கின்ற செய்தி, சூரியனுக்கு மரணம் உண்டா ? என்ற கேள்விக்கு வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது விஞ்ஞானிகளின் பதில். 500 கோடி வருடங்களாக எரிந்து கொண்டிருக்கின்ற சூரியன், அது தன்னிடத்தில் உள்ள ஹைட்ரஜன் எப்போதாவது தீர்ந்து விடத்தான் போகிறது, அப்போது அதன் மையப் பகுதியில் இருக்கும் வெப்பம் மேலும் 10 கோடி சென்டிகிரேட் ஆக அதிகரிக்கும். அந்த வெப்பம் காரணமாக சூரியன் வீங்க ஆரம்பிக்கும் பிரமாண்டமான அந்த வீக்கம் பிறக்கப்போகும் எல்லா நட்சத்திரங்களுக்கும் உரித்தான வீக்கம் தான், அதன் பிறகு அது சிவப்பு ராட்சதன் ஆக மாற்றமடைந்து, (சூரியனில்) அதில் உள்ள ஹைட்ரஜன் எல்லாம் தீர்ந்து போக, நியூக்ளியர் ஃப்யூஷன் தொடர் சங்கிலி மாற்றங்களால் எல்லாமே ஹீலியமாக மாறிய பிறகு ஹீலியமும் அடங்கி ஒடுங்கும் காலம் வரத்தான் செய்யும், அப்போது வீங்கிய சூரியன் மீண்டும் சுருங்க ஆரம்பிக்கும். அக்கினி இல்லாமல் இறக்கும் சூரியன்தான் அது. சூரியனுக்கே சாவு மணி அடிக்கிறார்கள் விஞ்ஞானிகள், ஆனால் இப்போதைக்கு இவை நடைபெறமாட்டாது. இதற்கு இன்னும் 500 கோடி வருடங்கள் இருக்கின்றன. அதனால் நாங்கள் கொஞ்சம் ஆறுதலாக இருப்போம்.என எழுதுகிறார் மதன்.

பூமியை விட நம்ம சூரியன்தான் இந்தப் பிரபஞ்சத்திற்கே தலைவன் என்று 400 வருடங்களுக்கு முன்பு அறிஞர் புரூனோ அறிவித்ததால், அவருக்கு ரோம்நகரில் ஏற்பட்ட மிகப் பரிதாபமான நிகழ்ச்சியை வாசித்து அதிர்ந்து போனேன். ஆண்டாண்டு காலமாக மதகுருமார்களின் கட்டுப்பாட்டில்தான் விஞ்ஞானிகள் கூட இருந்தார்கள் என்றும், அவர்கள் சொல்லுக்கு ஆமாஎன்று தலையாட்டாவிட்டால் அவர்களின் தலைதான் பறிபோகும் துயரம் இருந்தது என்பதனை வாசிக்கும் போது, மதம் எந்த வகையில் மதம் கொண்டு ஆடியதை உணரக்கூடியதாக உள்ளது.

பூமித்தாய் எப்படி வந்தாள் என்பதற்கு, ஆபிரிக்க, சீன, கிரேக்க  நாட்டுப் புராணக்கதைகளை வாசிக்கும் போது, நம்ம பாட்டி சொல்லும் கதைபோல உள்ளது. இதில் நம்ம புராணமும் இடம்பெற தவறவில்லை. அதுதான் மகாவிஷ்ணுவுடன் மோதிப்பார் என்ற தலைப்பில் மிக அருமையாக தந்திருக்கிறார் ஆசிரியர். கடைசியாக, கிரேக்கர்களின் புனைகதையின்படி ஜியாஎன்பவள் தான் பூமித்தாயாக உருவாகிறாள். அதிலிருந்து தான் ஜியாக்ரஃபிஎன்ற வார்த்தை பிறந்தாகக் குறிப்பிடுகிறார்.

கோப்பர்நிக்கஸ், கலிலீயோ, புரூனோ  இவர்கள் வாழ்ந்த காலத்தில் ஜெர்மனியில் பிறந்த யோஹேனஸ் கெப்லர்பற்றிய அரிய தகவல்களை அறியலாம். டெலஸ்கோப்பைக் கண்டுபிடித்த கலிலீயோ  அதன் பின்னர் தான் வானியல் விஞ்ஞானத்தில் பெரிய மாற்றத்தையே உருவாக்கினார்.நாம் இங்கிருந்து பார்ப்பது ஒரு சந்திரனையே, ஆனால் ஜுப்பிடருக்கு 14 சந்திரனகள் உண்டு என அவர் தான் கண்டுபிடித்தார். பூமி தான் சூரியனைச் சுற்றுவதாக கண்டுபிடித்தார்  இதைவிட பல கோள்களையும் அதன் இயக்கங்களையும் கண்டுபிடித்த கலிலீயோ  இறுதியில் அன்றைய போப்பாண்டவரால் இறக்கும் வரை வீட்டுக்காவலிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமி தாய் எப்படி தோன்றினாள்? என்பதற்கு பலவகையான மூடநம்பிக்கை கருத்துக்கள் சொல்லப்பட்டு வந்ததாக அறிஞர்கள் கூறுகின்றார்கள். 450 கோடி வருடங்களுக்கு முன்புதான் பூமி தோன்றியதாகவும், கிட்டத்தட்ட 13 கோடி வருடங்களுக்கு முன்பு பான்ஜீயா உடைந்து வடக்கு நோக்கி லாரேஷியா பகுதியும், தெற்கே நோக்கி கோண்டுவானாலாந்து எனப் பிரிந்து சென்றதாகவும், அப்பளம் உடைவது போல் பிளவுபட்ட பின்புதான் கண்டங்கள் உருவாகின என்றும், மதன் இங்கே குறிப்பிடுகின்றார். முதன்முதலாக பல வருடங்கள் கழித்து சூரிய ஒளி, நீர், மின்சாரம் இவை மூன்றும் கலந்து பாசிகளும் பாக்டீரியாக்களும் தோன்றி வளர்ச்சி அடைந்தன. இந்த சூரிய ஒளியையும் அதிலுள்ள வாய்களையும் சாப்பிட்ட அந்தத் தாவரங்கள், ஆக்சிஜனையும் தண்ணீரையும் வெழியே துப்பின அதுதான் நாங்கள் ஒவ்வொரு வினாடியும் சுவாசித்துக் கொண்டிருக்கும் ஆக்சிஜன் வாய்வு.

பூமித்தாயை போற்றுவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இது போன்ற அரிய பல தகவல்களை இந்த புத்தகத்தில் வாசிக்கலாம். நேரம் இருக்கும்போது கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாசியுங்கள்.

மேலும், சனிக் கிரகத்தைச் சுற்றி வரும் 18 சந்திரன் களை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். யுரேனஸ் 84 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றுகிறது. நெப்டியூன் சூரியனைச் சுற்ற 65 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது.

நம்ம பூமி, அரசன் சூரியன் மற்றும் எல்லாவற்றிற்கும் தாய் வீடாகஇருப்பது தான் பால் வீதி (Milky-Way ). இந்தப் பால் வீதியில் 20ஆயிரம் கோடி சூரியன் இருக்குதாம். இதைப் பற்றி மேலும் அரிய செய்திகளுக்குப் புத்தகத்தை வாசியுங்கள்.

நாமெல்லாம் கோடீஸ்வரர்கள் என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மை எதுவென்றால், தண்ணிர் மனிதர்கள்  நாங்கள். காரணம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். எமது உடம்பில் 92% தண்ணீர்தான். பூமியில் நீர் எப்படி வந்தது, அதன் தொடர் வளர்ச்சி என்ன? அதன் பயன்பாடுகள், மனிதன் அதனை எப்படி எந்தளவுக்கு உதாசீனம் செய்கிறான் போன்ற தகவல்கள் மிக மிக அருமை.

பூமியைப் போல ஒவ்வொரு கிரகங்களும், நட்சத்திரங்களும் பலவிதமான அமைப்புக்களை கொண்டுள்ளன. உதாரணமாக நெப்டியூனுக்கு ஹைட்ரஜன், ஹீலியம், மீதேன் போன்ற வாயுக்கள் மிக கூடுதலாக இருப்பதாகவும், 352 மைனஸ் டிகிரி பாரன்ஹீட் தான் அங்கு காணப்படும் ஐஸ் கிரகம் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எங்களுக்கெல்லாம் ஒரே ஒரு சந்திரன் தான் இருக்கின்றார், ஆனால் நெப்டியூனில் 8 சந்திரன்கள் இருக்கின்றனவாம்.

சுமார் 40 கோடி வருடங்களுக்கு முன்பு உயிரினங்கள் எப்படித் தோன்றின என்று பார்த்தால், முதலில் குட்டிக் குட்டி மீன்கள் உருவாகின, பின்னர் அவற்றுக்குக் கால்கள் (அவையே Reptiles ஆகும்) முளைத்துக் கரையை அடைந்தன. இதன் வளர்ச்சி தான் பின்பு வந்த காலங்களில் டைநோசரஸ்ஆக மாறின. பின்னர் அவற்றின் உடல் சுருங்கி அதில் இருந்து அவற்றுக்கு இறக்கைகள் முளைத்து பறக்க ஆரம்பித்தன. 6 கோடிஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு பெரிய கல் மோதியதால் அவை (டைநோசரஸ்) அழிந்துபோய், அவற்றிலிருந்து தப்பிய உயிரினங்களே பிற்காலத்தில் டிரைக்கடாக பாலூட்டிகளாக ( Mammals) மாறின. அவை தான் நமது முன்னோர்களாகிய குரங்குகள் . இனித் தெரியும் தானே நாம் எப்படி வந்தோம் என்று.

பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று எப்படிப்பட்ட தன்மை உள்ளது என்பதனை ஆசிரியர் இங்கே புரிந்து கொள்ளும்படியாக நமக்கு தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. காற்று என்பது   தனிமம் அல்ல அது கலப்படம் ஆனது. அதில் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும் 21 சதவிகிதம் ஆக்சிஜனும் கூடவே கொஞ்சம் ஹைட்ரஜன் ஹீலியம் கார்பன் டை ஆக்சைடு மீத்தேன் ஓசோன் இப்படி பல வாயுக்கள் இருக்கின்றன. நமக்கு மிக மிக அத்தியாவசியம் அதில் இருக்கும் ஆக்சிஜன் மட்டுமே.

காமெட் (Comet) பற்றிய, நாம் அறிந்திராத பல தகவல்கள் வாசித்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். என்னப்பா மேலே இருந்து ஒரு கல் வந்துகொண்டு இருக்குதாம், அது எங்கு போய் விழுகிறதோ தெரியவில்லை, நிலத்தில் விழாமல் கடலுக்குள் விழுந்து விட்டால் பாதிப்பு குறைவாம். அது நிலத்தில் விழுந்தால் அவ்வளவுதான். இந்த வசனத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள்  அல்லது செய்திகளில் வாசித்திருப்பீர்கள். பல்லாயிரக்கணக்கான கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பெரிய பாறை பூமியில் முட்டி மோதினால் பல மாற்றங்கள் இந்த பால் வீதியில் நடைபெறும். இந்த காமெட் டை கண்டுபிடித்தவர் யார்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? ஒவ்வொரு 76 வருடங்களுக்குஒரு முறைதான் இது பூமியை நோக்கி, அல்லது பூமியைப் பார்த்து ஒரு சலூட்அடித்துவிட்டுசூரியனையும் சுற்றிவிட்டு வந்தவழியாலேயே செல்லுமாம்.இதன் பயணம் நிள்வட்டப் பாத்யாக இருக்குமாம். இது தோன்றினால் நாட்டில் பஞ்சம் அல்லது கடுமையான நோய்கள் வருமாம். (கொறோனா சிறிது வித்தியாசமோ) கடைசியாக வந்த காமெட் 1986 ல் தானாம்.அட மிஸ் பண்ணீட்டம். பரவாயில்லை இனி 2062 ல் மீண்டும் ஹாலீஸ் காமெட் பூமியைத் தாண்டும்போது பார்த்தால் போச்சு. குட்டிப் பையன்கள் றெடியா? ஆச்சரியமான பல தகவல்களை இந்த புத்தகத்தில் கனிகளைப் போல் காய்து பழுத்துக் கிடக்கின்றன! பழங்களை ருசியுங்கள்,

இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். சுமார் 25 கோடி ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு உயிரினங்கள். அநேகமாக எல்லா வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கரப்பான் பூச்சி மற்றது ஒன்று சுறாமீன்

கண்டிப்பாக வாசியுங்கள். பால்வீதியில்(Milky-Way) என்ன நடக்கின்றது என்பதனை ஒரு முறை உள்ளே சென்று ஆராயுங்கள்.


பொன் விஜி

– சுவிஸ்

நூல் தகவல்:
நூல்: பூமித்தாய்
பிரிவு : கட்டுரைகள்
ஆசிரியர்: மதன்
வெளியீடு: தங்கத்தாமரை பதிப்பகம்
வெளியான ஆண்டு  2020
விலை: ₹ 70 (Kindle Edition)
 பக்கங்கள் : 111
Kindle Editon :

எழுதியவர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *